சயீத் சிர்சாத்
சயீத் ஷிர்சாத் (Sayed Shirzad பிறப்பு: அக்டோபர் 1, 1994) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . ஷிர்சாத் ஒரு இடது கை மட்டையாளர் இவர் இடது கை மித வேகத்தில் பந்து வீசுகிறார். இவர் ஆப்கானித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிரார்.
உள்ளூர் போட்டிகள்
தொகு2011 ஆம் ஆண்டு அயர்லாந்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஷிர்சாத் 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] ராவல்பிண்டி ராம் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஃபேசல் வங்கி இருபது-20 கோப்பையில் ஆப்கானிஸ்தான் சீட்டா துடுப்பாட்ட அணிக்காக இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] இந்த போட்டியிலிவருக்கு மட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பந்து வீச்சில் இரு இலக்குகளைக் கைப்பற்றினார்.[3]
11 ஜூலை 2018 அன்று 2018 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் பூஸ்ட் பிராந்தியத்திற்கான சார்பாக பட்டியல் அ போட்டிகளில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இரண்டு பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அப்தாப் அலாம் பந்து வீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 69 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரண்டு இலக்குகளை கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் பூஸ்ட் பிராந்திய அணி 57 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற கசி அகமதுல்லா கான் மாகாண ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். செப்டம்பர் 24, காபூல் துடுப்பாட்ட மைதானத்தில் மிஸ் அயினிக் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் ஒன்பது ஓவர்கள் வீசி 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சிர்சாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மிஸ் அயினிக் துடுப்பாட்ட அணி 88 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4] அந்தத் தொடரில் இவர் ஆறு போட்டிகளில் விளையாடி பன்னிரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[5]
இருபது20
தொகுசெப்டம்பர் 2018 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆண்டில் இவர் காந்தஹார் அணியில் இடம் பெற்றார்.[6] எட்டு போட்டிகளில் பதினாறு இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய காந்தஹார் நைட்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் வரிசையில் இவர் முதல் இடம் பெற்றார்.[7]
சர்வதேச போட்டிகள்
தொகு29 நவம்பர் 2015 அன்று ஓமானுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார்.[8]
2019 ஆம் ஆண்டில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 2, டெஹ்ரதம் துடுப்பாட்ட மைதானத்தில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானர்.
மே 2018 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் அணி தொடக்க தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது, ஆனால் இவர் விளையாடும் அணியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.[9][10]
குறிப்புகள்
தொகு- ↑ "Other matches played by Sayed Shirzad". CricketArchive. Archived from the original on 13 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Twenty20 Matches played by Sayed Shirzad". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
- ↑ "Afghan Cheetas v Rawalpindi Rams, 2011/12 Faysal Bank T-20 Cup". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
- ↑ "Group B, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Khost, Jul 11 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 July 2018.
- ↑ "Ghazi Amanullah Khan Regional One Day Tournament, 2018 - Boost Region: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
- ↑ "Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ "Afghanistan Premier League, 2018/19 - Kandahar Knights: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
- ↑ "Afghanistan tour of United Arab Emirates, 1st T20I: Afghanistan v Oman at Abu Dhabi, Nov 29, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015.
- ↑ "Afghanistan Squads for T20I Bangladesh Series and on-eoff India Test Announced". Afghanistan Cricket Board. Archived from the original on 29 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.