சயேட்டெட் 13
சயேட்டெட் 13 (Shayetet 13, (எபிரேயம்: שייטת 13, அர்த்தம் சிறு கப்பற்படை 13) என்பது இசுரேலிய கடற்படையின் சிறப்பு கடற்படை அதிரடிப்படைப் பிரிவாகும். இப்பிரிவு இசுரேலிய பாதுகாப்புப் படைத்துறைகளின் சிறப்பு படைப்பிரிவின் முதன்மையான பிரிவுகளில் ஒன்றாகும். சயேட்டெட் 13 கடல்-தரை திடீர் தாக்குதல், பயங்கரவாத தடை, நாசவேலை, கடல்சார் புலனாய்வு திரட்டல், கடல்சார் பயணக்கைதி மீட்பு, கப்பலினுள் அதிரடி ஆகியவற்றில் சிறப்புப் பெற்றது. இப்பிரிவு இசுரேலின் ஏறக்குறைய எல்லா முக்கிய போர்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளது. இது இசுரேல் இராணுவத்தின் அதி அந்தரங்கமான பிரிவுகளில் ஒன்றாகும். இதன் நடவடிக்கைகளின் விபரங்கள், செயற்பாட்டு நிலையிலுள்ள நபர்களின் அடையாளங்கள் என்பன மிக முக்கியமான மறைக்கப்பட்ட விடயங்களாகவுள்ளன. இப்பிரிவு உலலகிலுள்ள சிறந்த சிறப்புப் படைகளுடன் சேர்த்து நோக்கப்படுகின்றது.[1] இது அமெரிக்கவின் நேவி சீல்ஸ் மற்றும் பிரித்தானியாவின் சிறப்பு படகு சேவையுடனும் ஒப்பிடப்படுகின்றது.[2]
சயேட்டெட் 13 Shayetet 13 | |
---|---|
சயேட்டெட் 13 சின்னம் | |
செயற் காலம் | 1948–தற்போது |
நாடு | இசுரேல் |
கிளை | இசுரேலிய கடற்படை |
வகை | கடற்படை அதிரடிப்படை |
அரண்/தலைமையகம் | Atlit naval base |
சுருக்கப்பெயர்(கள்) | השייטת (HaShayetet, The Flotilla) |
சண்டைகள் | ஆறு நாள் போர் தேய்வழிவுப் போர் Operation Spring of Youth Occupation of South Lebanon Operation Moses Second Intifada Santorini Noah's Ark Abu Hasan 2006 Lebanon War Gaza War Francop Affair Gaza flotilla raid Iron Law |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | Ami Ayalon Ze'ev Almog Yoav Galant |
உசாத்துணை
தொகு- ↑ Mahnaimi, Uzi; Jenkins, Gareth (2010-06-06). "TimesonLine- Operation calamity". The Times (London). http://www.timesonline.co.uk/tol/news/world/middle_east/article7144753.ece. பார்த்த நாள்: 2010-06-07.
- ↑ Booth, Robert (2010-05-31). "Israeli attack on Gaza flotilla sparks international outrage". தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2010/may/31/israeli-attacks-gaza-flotilla-activists. பார்த்த நாள்: 2010-06-21.