பென்சைட்டென்

(சரஸ்வதி (ஜப்பான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பென்சைட்டென் (Benzaiten) என்பது சப்பானில் இந்துக் கடவுள் சரசுவதிக்கு வழங்கும் சொல். பென்சைட்டென் சப்பானில் வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் ஒருவர். சப்பானில் சரசுவதியின் வழிபாடு சுவர்ணபிரபாச சூத்திரம் மூலமாக ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பரவியது. சுவர்ணபிரபாச சூத்திரத்தில் இவரை குறித்த ஒரு பிரத்யேக பகுதியே உள்ளது. மேலும் தாமரை சூத்திரத்திலும் இவரை குறித்த தகவல்கள் உள்ளன. இந்திர சரஸ்வதியை போலவே இவரும் கலை மற்றும் கல்வியின் அதிபதியாக வணங்கப்படுகிறார்.

சரஸ்வதி சிலை

ரிக்-வேதத்தில் சரஸ்வதி விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே தான் இவர் ஜப்பானில் பாம்புகள் மற்று டிராகன்களுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறார். இவருடைய முக்கியமான கோவில் டோக்யோ நகரில் இருநது 50 கி.மீ தெற்கே உள்ள எனோஷிமா தீவில் உள்ளது. ஜப்பானில் முழுக்க உள்ள பிற இடங்களிலும் இவருக்கு நிறைய கோவில்கள் காணப்படுகின்றன. எனோஷிமா தீவில் உள்ள கோவில்களை பற்றிய நூலில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த நூலின் படி இவர் அநவதப்தம் என்ற ஏரியின் டிராகன் அரசனுடைய மூன்றாவது மகள் ஆவார்.[1][2][3]

சரஸ்வதி ஷிண்டோ மத பெண் தெய்வங்களுடன் ஒன்றிணைந்து வழிபடப்படுகிறார்.

சரஸ்வதி கோவில்
சரஸ்வதி சிலை

வெளி இணைப்புகள்

தொகு

மூலம்

தொகு
  • Japan and Indian Asia by Hajime Nakamura. Publisher: Firma KLM, 1961. Publication Date: 1961
  • India and Japan: A Study in interaction during 5th cent - 14th century - By Upendra Thakur .

மேற்கோள்கள்

தொகு
  1. Ludvik, Catherine (2007). Sarasvatī: Riverine Goddess of Knowledge. From the Manuscript-carrying Vīṇā-player to the Weapon-wielding Defender of the Dharma. Brill. pp. 1–3.
  2. Rajesh Verma (January 2005). "Hindu Contributions to Japanese Religion" (PDF) (in ஆங்கிலம்). Hindu Education Foundation. Archived from the original (PDF) on 2006-10-21. பார்க்கப்பட்ட நாள் May 14, 2020.
  3. Kinsley, David (1998). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition. Motilal Banarsidass Publishers. pp. 10–13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சைட்டென்&oldid=4101060" இலிருந்து மீள்விக்கப்பட்டது