சராய்கேலா (Saraikela (also spelled Seraikella), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த சராய்கேலா கர்சாவான் மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இந்நகரம் கார்காய் ஆற்றின் தென்கரையில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு தென்கிழக்கே 133 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜம்சேத்பூர் மற்றும் சைபாசா நகரங்களுக்கு இடையே அமைந்த சராய்கேலா, ஜம்சேத்பூருக்கு தென்மேற்கே 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சராய்கேலா
சராய்கேலா is located in சார்க்கண்டு
சராய்கேலா
சராய்கேலா
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தென்கிழக்கில் சராய்கேலா நகரத்தின் அமைவிடம்
சராய்கேலா is located in இந்தியா
சராய்கேலா
சராய்கேலா
சராய்கேலா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°43′00″N 85°55′32″E / 22.7168°N 85.9255°E / 22.7168; 85.9255
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்சராய்கேலா கர்சாவான்
அரசு
 • வகைபேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்5.62 km2 (2.17 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,252
 • அடர்த்தி2,500/km2 (6,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
833219
தொலைபேசி குறியீடு எண்06597
வாகனப் பதிவுJH-22
எழுத்தறிவு83.80%
மக்களவைத் தொகுதிசிங்பூம்
சட்டமன்றத் தொகுதிசராய்கேலா
இணையதளம்seraikela.nic.in

புவியியல்

தொகு

சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் தெற்கு முனையில் சராய்கேலா நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 10 வார்டுகளும், 2975 வீடுகளும் கொண்ட சராய்கேலா பேரூராட்சியின் மக்கள் தொகை 14,252 ஆகும். அதில் ஆண்கள் 7,450 மற்றும் 6,802 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 913 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.75% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.80% ஆகவுள்ளது.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.30%, இசுலாமியர் 3.95%, சமணர்கள் 6.76% மற்றும் பிறர் 0.39% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்கேலா&oldid=3516711" இலிருந்து மீள்விக்கப்பட்டது