சர்க்கி தாத்திரி மாவட்டம்
சர்க்கி தாத்திரி மாவட்டம் (Charkhi Dadri District) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். அரியானா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த இப்புதிய மாவட்டம் 01 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது. [1][2][3]இதன் நிர்வாகத் த்லைமையிடம் சர்க்கி தாத்திரி நகரம் ஆகும்.
சர்க்கி தாத்திரி
चरखी दादरी | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவிய நாள் | 1 டிசம்பர் 2016 |
தலைமையிடம் | சர்க்கி தாத்திரி |
மக்கள்தொகை (2011) | |
• Total | 5,02,276 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
சட்டமன்றத் தொகுதிகள் | 2 |
இணையதளம் | https://charkhidadri.gov.in |
அமைவிடம்
தொகுஇம்மாவட்ட தலைமையிடமான சர்க்கி தாத்திரி நகரம், தில்லிக்கு தென்மேற்கில் 113 கிமீ தொலைவிலும்; சண்டிகரிலிருந்து 295 கிமீ தொலைவிலும் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுசர்க்கி தாத்திரி மாவட்டம் சர்க்கி தாத்த்ரி மற்றும் பத்ரா எனும் இரண்டு வருவாய் வட்டங்களும், பௌந்து கலான் எனும் துணை வட்டமும் கொண்டது. [2][1]மேலும் இம்மாவட்டம் சர்க்கி தாத்திரி, பத்ரா, ஜோஜு, பௌந்து கலான் என 4 ஊராட்சி ஒன்றியகளையும், 172 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு20111-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,02,276 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 67.04% ஆகவுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Charki Dadri notified as 22nd district of Haryana". The Times of India. 5 December 2016. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Charki-Dadri-notified-as-22nd-district-of-Haryana/articleshow/55803185.cms.
- ↑ 2.0 2.1 Charkhi Dadri creation.
- ↑ Notification of Nnew district charki Dadri issued; Publication: Business Standard newspaper; Published: 3 December 2016; Accessed: 6 March 2017