சர்மணவதி நதி
சர்மணவதி நதி (Charmanwati river) புராண காப்பியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நதியாகும். பண்டைய சம்பல் ஆற்றின் பழைய பெயர்தான் சர்மணவதி நதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சமதக்னி முனிவரைக் கொன்ற கார்த்தவீர்யார்ச்சுணனை மகன் பரசுராமர் கொன்றதுடன், சத்ரியர்களின் இருபத்தோரு தலைமுறைகளையும் கொன்றார். இறந்தவர்களின் இரத்தத்தை பரசுராமர் ஐந்து மடுக்களில் தேக்கி வைத்தார். பின்னர் தன் தந்தையின் அசரீரி உத்தரவுப்படி ஆசிரமத்தின் புனிதத்தைக் காப்பதற்காக பரசுராமர், மடுக்களின் கரைகளை இடித்ததும் ரத்தம் பீரிட்டு வெளியேறி நதியாக ஓடியது. இறந்த உடல்கள் அதில் மிதந்து சென்றன. எனவே, அந்த நதி சர்மணவதி நதி என அழைக்கப்பட்டது. நாளடைவில் இது இயல்பான நதியானபோது சம்பல் நதி என்று பெயர் பெற்றது என புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. [1][2]
வடமொழி காப்பியமான மகாபாரதம் சம்பல் நதியை சர்மணவதி நதி என்று குறிப்பிடுகிறது. அக்னி வேள்விக்காக ஆரிய மன்னன் ரென்டி தேவனால் பலிகொடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விலங்குகள் மற்றும் மாடுகளின் குருதியிலிருந்து இந்நதி தோன்றியதாகவும் குறிப்பிடுகிறது.[3]
ஆரிய மன்னன் ரென்டி தேவன் அக்னி கோத்திரத்திற்காக எண்ணற்ற விலங்குகளை பலி கொடுத்தான். அவன் பலிகொடுத்த விலங்குகளின் தோல்கள் அக்கரையில் படிந்தது. எனவே இந்த நதி சர்மணவதி நதி என்று அழைக்கப்படுகிறது.[4]"
மகாபாரதத்தில்
தொகுசர்மணவதி நதி பாஞ்சால இராச்சியத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. மன்னன் துருபதன் தெற்கு பாஞ்சலத்தில் இருந்து சார்மன்வதி நதிக்கரை வரை ஆட்சி செய்தான். மன்னன் ரென்டி தேவன் எண்ணற்ற விலங்குகளை சர்மணவதி நதிக்கரையில் பலி கொடுத்துள்ளார். குந்தி தனது பிறந்த குழந்தையை (கர்ணன்) ஒரு கூடையில் வைத்து நதியில் விட்டாள். அக்கூடை அசுவ நதியிலிருந்து சர்மணவதி நதிக்குச் சென்று பிறகு சர்மணவதி நதியிலிருந்து யமுனைக்கு சென்று, அப்படியே கங்கை வழியாக சாம்பபுரி என்னும் நகரை அடைந்தது. சாம்பபுரி என்பது அங்க இராச்சியத்தின் தலைநகரமாகும்.
சர்மணவதி நதி நதிக்கரைக்கு அணிவகுத்து செல்லும் போது, குரு இராச்சியத்தின் வீரரான சகாதேவன், மன்னன் சமவகனின் மகனை சந்தித்தான். அவர் வாசுதேவ கிருஷ்ணரால் தோற்கடிக்கப்பட்டவர். ஆதலால் பழைய விரோதம் காரணமாக சகாதேவனுடன் போரிட்டான். இறுதியாக சகாதேவன் அந்த இளவரசனை தோற்கடித்து தெற்கு திசையில் அணிவகுத்து சென்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jain, Sharad K.; Pushpendra K. Agarwal; Vijay P. Singh (2007). Hydrology and water resources of India- Volume 57 of Water science and technology library - Tributaries of Yamuna river. Springer. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-5179-4.
- ↑ Correspondent, Vikatan. "அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ Mbh.3.207.10715 "And in days of yore, O Brahmana, two thousand animals used to be killed every day in the kitchen of king Rantideva; and in the same manner two thousand cows were killed every day."
- ↑ "charmanwati, Mbh.7.65.2817". Ancient Voice. Jijith Nadumuri Ravi. பார்க்கப்பட்ட நாள் 29 December 2010.