சர்மிளா ஆசுவால்
சர்மிளா ஆசுவால் (Sharmila Oswal) என்பவர் அரசு சாரா நிறுவனமான பசுமை ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் ஜெயின் பன்னாட்டு வர்த்தக அமைப்பின் மகளிர் பிரிவின் தலைவி ஆவார்.
சர்மிளா ஆசுவால் Sharmila Oswal | |
---|---|
பிறப்பு | அலிபாங்கு, மகாராட்டிரம், இந்தியா |
பணி | சமூகப்பணி பரோபகர் |
அறியப்படுவது | பசுமை சக்தி அறக்கட்டளை, ஜெயின் பன்னாட்டு வணிக நிறுவனம் |
வலைத்தளம் | |
Sharmila Oswal |
தொழில்
தொகு2009ல், பசுமை ஆற்றல் அறக்கட்டளை எனும் அரசு சாரா நிறுவனம் ஒன்று புனேயில் பயனுள்ள கழிவு மேலாண்மை மூலம் ஆற்றலைச் சேமிக்க சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது.[1] இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மக்கள் தங்களுக்கு உதவுவதற்குக் கல்வியில் கவனம் செலுத்தும் திட்டம் மற்றும் உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை காய்கறி தோட்டம் ஆகியவை அடங்கும் என்பதை ஆசுவால் விளக்கினார்.[1]
2010-ல், பசுமை சக்தி அமைப்பும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 'ஈகோவெர்சிட்டி' என்ற கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆசுவால் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பயிற்சிப் பட்டறைகள், சான்றிதழ் படிப்புகள் மற்றும் தொலைதூரக் கற்றல் பட்டப் படிப்புகள், அத்துடன் தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை இதன் மூலம் வழங்குவதாகத் தெரிவித்தார்.[2]
2010ஆம் ஆண்டில், புனே மேயர் மோகன்சிங் ராஜ்பாலிடம் பசுமை சக்தி அறக்கட்டளை தயாரித்த அறிக்கை, "புனேவில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க மழை நீரைச் சேமித்தல்" என்ற தலைப்பில் சமர்ப்பித்தது.[3] ஆய்வை முடிக்க ஆறு மாதங்கள் ஆனதாக ஆசுவால் விளக்கினார். மேலும் நெருக்கடியைத் தவிர்க்க மழை நீரைச் சேமித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று வாதிட்டார்.[3]
2011ஆம் ஆண்டில், பசுமை சக்தி அறக்கட்டளை பொது கழிப்பறைகளைக் கட்டுவதற்கான திட்டத்தை அறிவித்தது. மேலும் ஆசுவால் "பெண்களுக்கு பொது கழிப்பறைகள் கிடைக்காததின் விளைவு இந்த பாலினத்தின் இயக்கம் மற்றும் திறமையாக வேலை செய்யும் திறனைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது," என் ஆசுவால் விளக்கினார். பசுமை சக்தி அறக்கட்டளை இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது என்றும் இது மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று கூறினார்.[4]
2012ஆம் ஆண்டில், பசுமை சக்தி அறக்கட்டளை மெழுகுவர்த்திகள் மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளுக்குப் பதிலாக குடும்பங்களுக்குச் சூரிய விளக்குகளை விநியோகிக்க அருணோதயா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[5] கட்டுமான பணிகளில் மும்முரமாக இருக்கும் பகுதிகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளின் மையமாக இருந்த கிராமங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஆசுவால் குறிப்பிட்டார்.[5]
2016ஆம் ஆண்டில், பசுமை சக்தி அறக்கட்டளை மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு மாதிரியையும், அரசு சார நிறுவனம் உருவாக்கிய எளிய குடிநீர் வடிகட்டியையும் செயல்படுத்தியது.[6] இந்த மாதிரியினை புனேவிலிருந்து மராத்வாடா வரை எடுத்துச்சென்றார். இது குடியிருப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மழைக்காலத்திற்கு முன் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பது எப்படி என்பதை ஆசுவால் விளக்கினார்.[6] மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் 2017 தண்ணீர் தொடர்பாக நடத்திய பயிலரங்கில் நிபுணராக ஆசுவால் பங்கேற்றார்.[7]
2017ஆம் ஆண்டில், ஜெயின் பன்னாட்டுத் தொழிலக நிறுவன வணிக மற்றும் தொழில்முறை சங்கம், பணத்திற்குப் பதிலாக எண்ணிம நாணய பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கத் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[8] ஊழலைக் குறைக்க எண்ணிம பரிவர்த்தனைகளுக்கு ஆசுவால் மேற்கொள்ள வலியுறுத்தினார்.[8] 2017ஆம் ஆண்டில், ஜிடோ, ஆசுவால் தலைமையிலான 'ஜிட்டோ பெண்கள் எண்ணிம் போராளிகள்' திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இது எண்ணிம நாணய பரிவர்த்தனைகள் குறித்து பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும். ஆசுவால் "ஒவ்வொரு வீடு, சந்தை, சமூகம் மற்றும் நாடு முழுவதும் எண்ணிம பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு" உதவும் எனப் பரிந்துரைத்தார்.[9] இதற்கான பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் முகமாக முகநூலில் கணக்கு ஒன்றையும் தொடங்கினார் ஆசுவால். இந்த பிரச்சாரத்திற்கான பிரதமர் மோதியின் பங்களிப்பு உட்படப் பொதுமக்களின் ஆர்வம் ஊக்கமளிக்கிறது எனத் தெரிவித்தார்.[10]
விருது
தொகு- 2007-ல் சுழல் சங்க பன்னாட்டு பெண்ம[ மேற்கோள் தேவை ]ணி விருது
தொழில்
தொகுஆசுவாலின் குடும்பம் கழிவு நீர் மறுசுழற்சி அமைப்புகளை உற்பத்தி செய்யும் வணிகத்தை மேற்கொண்டுள்ளது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Das, Dipannita (13 November 2009). "Waste is not waste until wasted". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/Waste-is-not-waste-until-wasted/articleshow/5224622.cms.
- ↑ Das, Dipannita (17 May 2010). "Now, education programmes on environmental matters". Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/Now-education-programmes-on-environmental-matters/articleshow/5938691.cms.
- ↑ 3.0 3.1 Das, Dipannita (8 June 2010). "'Rain water harvesting can meet 21% of water needs'". The Times of India. https://timesofindia.indiatimes.com/City/Pune/Rain-water-harvesting-can-meet-21-of-water-needs/articleshow/6022141.cms.
- ↑ "Shame on PMC; NGO to build public toilets in Pune". DNA. 13 April 2011. https://www.dnaindia.com/mumbai/report-shame-on-pmc-ngo-to-build-public-toilets-in-pune-1531397.
- ↑ 5.0 5.1 Paul, Debjani (26 November 2012). "The light of life". The Indian Express. http://archive.indianexpress.com/news/the-light-of-life/1036370/.
- ↑ 6.0 6.1 Dastane, Sarang (26 April 2016). "Rainwater harvesting model travels to drought-hit areas". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/Rainwater-harvesting-model-travels-to-drought-hit-areas/articleshow/51986506.cms.
- ↑ Zaerpoor, Yasmin. "Another Year of Water Diplomacy Workshops in Action". MIT Urban Planning இம் மூலத்தில் இருந்து 20 ஜூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200720125807/https://dusp.mit.edu/epp/news/another-year-water-diplomacy-workshops-action.
- ↑ 8.0 8.1 8.2 Nair, Manoj R. (5 March 2017). "How Jains plan to go cashless, and spread the message". Hindustan Times. https://www.hindustantimes.com/mumbai-news/how-jains-plan-to-go-cashless-and-spread-the-message/story-nchab6drgWJb6WzjeoasCI.html.
- ↑ "Jain body starts digital payment training scheme for women". DaijiWorld. 28 February 2017. https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=440461.
- ↑ "PM Narendra Modi praises Pune women for digital literacy drive". The Times of India. 10 April 2017. https://timesofindia.indiatimes.com/city/pune/pm-praises-pune-women-for-digital-literacy-drive/articleshow/58099231.cms.
வெளி இணைப்புகள்
தொகு- பசுமை ஆற்றல் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2022-01-01 at the வந்தவழி இயந்திரம் (அதிகாரப்பூர்வ இணையதளம்)
- MS உடன் Webinar. ஷர்மிளா ஓஸ்வால் (ராஷ்ட்ரிய கௌரவ் புரஸ்கார் விருது பெற்றவர்) | 17 மே 2020 அன்று நேரலையில் எடுக்கப்பட்டது (வலைஒளி)