சர்மிளா சர்க்கார்

சர்மிளா சர்க்கார் (Sharmila Sarkar; பிறப்பு சனவரி 1,1979) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் உறுப்பினர் ஆவார். .[1]

சர்மிளா சர்க்கார்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 June 2024
முன்னையவர்சுனில் குமார் மோண்டல்
தொகுதிபர்தமான் புர்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1979 (1979-01-01) (அகவை 45)
கத்வா புர்பா பர்தமான், மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வேலைமருத்துவர்

இளமை

தொகு

சர்க்கார் மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வாவினைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1995ஆம் ஆண்டில் அக்ரத்விப் ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் மத்யமிக் தேர்ச்சி பெற்று 1997ஆம் ஆண்டில் கட்வா கல்லூரியில் சேர்ந்தார். இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் முதுநிலை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] தற்போது இவர் டம்டமில் வசித்து வருகிறார், கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார்.[3][4]

அரசியல் வாழ்க்கை

தொகு

சர்க்கார் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "West Bengal Election Result 2024 Live: Full list of winners - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. "রাজনীতিতে আনকোরা শর্মিলাই প্রার্থী পূর্বে". பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  3. "মফঃস্বল থেকে লড়াই করে উত্থান, বর্ধমান পূর্বে তৃণমূলের প্রার্থী কে এই শর্মিলা?". Eisamay (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  4. Gupta, Apromeya Datta (2024-03-11). "পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড.‌ শর্মিলা সরকার, রাজনীতিতে আনলেন কে?‌". Hindustantimes Bangla (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  5. "Bardhaman Purba Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  6. "Bardhaman Purba, West Bengal Lok Sabha Election Results 2024 Highlights: Dr. Sharmila Sarkar Wins Seat by 248740 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  7. "Full List of winners in Lok Sabha Elections 2024". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிளா_சர்க்கார்&oldid=4115954" இலிருந்து மீள்விக்கப்பட்டது