சலகண்டபுரம் இராமசாமி கிருட்டிணமூர்த்தி

ச. இரா. கிருட்டிணமூர்த்தி (Jalakantapuram Ramaswamy Krishnamoorthy) என்பவர் தமிழக மருத்துவர் ஆவார். இவரின் மருத்துவ பங்களிப்புக்காக இந்திய அரசு 2010ல் பத்மசிறீ விருதினை வழங்கியது.[1]

மருத்துவ பயிற்சியாளராக இவர் தனது வாழ்நாள் முழுவதும் கிராமப்புற இந்தியாவிற்காகப் பங்காற்றினார். சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள குன்றத்தூரில் 1950களின் முற்பகுதியிலிருந்து இன்னும் 81 வயதாகிய போதிலும் மருத்துவச் சேவையினைத் தொடர்ந்து வருகிறார்.

கிருஷ்ணமூர்த்தி சித்த மருத்துவ முறைகளில் அறிவியல் பார்வை மூலம் உலகளாவிய அங்கீகாரத்தினை சித்த மருத்துவத்திற்குப் பெற்றுத் தந்தார். இதன் அடிப்படையில் பல அறிவியல் பூர்வ ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு, மருத்துவ ரீதியாகப் பயனுள்ள சூத்திரங்களை உருவாக்கினார். இந்திய அரசு, சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுக்கள் மூலமாகவும் இது அடையப்பட்டது.

சோரியாஸிஸ் போன்ற ஒரு சிக்கலான தோல் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக எளிய மூலிகை மருந்தினை (777 எண்ணெய்) உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார். இதற்கு முன்னர் உலகின் எந்தவொரு மருத்துவ முறையிலும் இதற்குத் தீர்வு காணப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

தொகு

 

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Dr. JRK’s Siddha Research and Pharmaceuticals Pvt Ltd