சலஞ்சர் ஆழம்

சலஞ்சர் ஆழம் (Challenger Deep) என்பது கடலில் அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 மீட்டர் (36,000 அடிகள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே.[1][2] இவ்விடம் மரியானா தீவுகள் இருக்கும் பகுதியில் மரியானா அகழியின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 கிமீ தொலைவில் ஃபைசு தீவும், வடகிழக்கே 306 கிமீ தொலைவில் குவாமும் உள்ளன.[3] 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய அரச கடற்படை அளவைக் கப்பலான எச்.எம்.எஸ் சலஞ்சர் என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது.

மேற்குப் பசிபிக் பெருங்கடலில் சலஞ்சர் ஆழத்தின் அமைவிடம்

இதுவரை நான்கு கலங்களே இப்பகுதியில் இறங்கியுள்ளன. முதலில் 1960 ஆம் ஆண்டில் டிரியெஸ்ட் (Trieste) என்னும் ஆளேற்றிய கலம் இறங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் சப்பானிய கைக்கோ என்னும் ஆளில்லாத் தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலமும், 2009 இல் நேரெயசு என்னும் கலமும் 2012 ஆம் ஆண்டில் டீப்சீ சலஞ்சர்[4][5][6] என்னும் ஆழ்கடல் நீர்மூழ்கிக்கலனும் இப்பகுதியில் இறங்கியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Amos, Jonathan (7 திசம்பர் 2011). "Oceans' deepest depth re-measured". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-15845550. பார்த்த நாள்: 7 திசம்பர் 2011. 
  2. Armstrong, Andrew A. (2011-12-22). "Cruise Report - UNH-CCOM/JHC Technical Report 11-002" (PDF). NOAA/UNH Joint Hydrographic Center University of New Hampshire. p. 12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01.
  3. The Colbert Report, airdate: 2012 ஏப்ரல் 12, interview with ஜேம்ஸ் கேமரன்
  4. Than, Ker (25 மார்ச் 2012). "James Cameron Completes Record-Breaking Mariana Trench Dive". தேசிய புவியியல் கழகம். பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. Broad, William J. (25 மார்ச் 2012). "Filmmaker in Submarine Voyages to Bottom of Sea". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/03/26/science/james-camerons-submarine-trip-to-challenger-deep.html. பார்த்த நாள்: 25 மார்ச் 2012. 
  6. AP Staff (25 மார்ச் 2012). "James Cameron has reached deepest spot on Earth". MSNBC. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலஞ்சர்_ஆழம்&oldid=2742705" இலிருந்து மீள்விக்கப்பட்டது