சலா சவுத்ரி

வங்கதேச பத்திரிக்கையாளர்

சலா உதின் சோயிப் சவுத்ரி (Salah Uddin Shoaib Choudhury பிறப்பு: ஜனவரி 12, 1965) வங்காளதேச பத்திரிகையான வீக்லி பிளிட்ஸின் ஆசிரியர் ஆவார்.[1][2] 1996 இல், வங்காளதேசத்தின் முதல் தனியார் தொலைக்காட்சி சேனலான ஏ -21 என்பதனை நிறுவினார். ஜிஹாதிகளுக்கு எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.மேலும் இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையில் ஒரு கலாச்சார புரிந்துணர்வை உருவாக்குவதற்காக தான் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாக இவர் மூன்று முறை உடல் ரீதியாக தாக்கப்பட்டார். மேலும் வங்களாதேசத்தில் ஒரு முறை இவர் கடத்தப்பட்டார்.[3]

சர்ச்சை தொகு

அமைதி இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்கான சர்வதேச மன்றத்தின் அழைப்பின் பேரில் டெல் அவீவில் நடந்த ஒரு கருத்தரங்கில் இவர் கலந்து கொள்ள முயன்றபோது சலா உதீன் சோயிப் சவுத்ரி நவம்பர் 29, 2003 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஜனவரி 24, 2004 அன்று அவர் மீது டாக்காவின் விமான நிலைய காவல் நிலையத் தலைவர் முகமது அப்துல் ஹனிஃப் எனப்வரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் ஒரு மொசாட் முகவர் என்பதால் இவர் மீது வாக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஜனவரி 9, 2014 அன்று பங்களாதேஷின் தண்டனைச் சட்டத்தின் 505 (ஏ) பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.[4][5]

வெளியீடுகள் தொகு

சவுத்ரி பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவரது சமீபத்திய புத்தகம், இஞஸ்டிஸ்& ஜிஹாத். இந்த நூல் அக்டோபர் 2007 இல் வெளியிடப்பட்டது. மே 2008 இல், இத்தாலிய வெளியீட்டு இல்லமான நெப்டாசியா இந்தப் புத்தகத்தை இத்தாலிய மொழியில் சோனோ கோல்பெவோல் என்ற தலைப்பில் வெளியிட்டது. இதன் மூலம் சமகால வங்காளதேச எழுத்தாளரின் ஒரு நூல் இத்தாலிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.[6]

அமெரிக்காவின் சிட்டிசன்ஸ் யுனைடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த 'அமெரிக்கா அட் ரிஸ்க்' என்ற ஆவணப்படத்தில் இவர் நேர்காணல் காணப்பட்டார். [1] பரணிடப்பட்டது 2020-10-14 at the வந்தவழி இயந்திரம்

இவரின் இன்சைட் மெட்ராஸா அக்டோபர் 2009 இல் வங்காளதேசத்தில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில், சவுத்ரி மதரஸா கல்வி குறித்த விரிவான தகவல்களை அவர் அந்த நூலில் இடம்பெறச் செய்தார்.

இஸ்ரேலின் அமைப்பு, இலக்கியம் மற்றும் அமைதி கலாச்சாரம் ஆகியன பற்றிய சர்வதேச அமைப்பு ஒன்றினை இவர் நிறுவினார்.வங்காளதேசத்தில் எவ்வாறு அல்கொய்தா வளர்ச்சி அல்லது ஆதரவு பெற்றது என்பதனைப் பற்றி எழுதினார்.

உலகெங்கிலும் உள்ள தி ஹில் போன்ற முக்கிய செய்தித்தாள்களால் சலா உதின் சோயிப் சவுத்ரி மேற்கோள் காட்டப்படுகிறார். தீவிர இஸ்லாம், யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய போர்க்குணம் ஆகிய தொடர்பான தலைப்புகளில் விரிவுரை ஆற்றுவதற்காக பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் இவர் அழைக்கப்படுகிறார். [2]

தக்குதல்கள் தொகு

இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையில் ஒரு கலாச்சார புரிந்துணர்வை உருவாக்குவதற்காக தான் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாக இவர் மூன்று முறை உடல் ரீதியாக தாக்கப்பட்டார். மேலும் வங்களாதேசத்தில் ஒரு முறை இவர் கடத்தப்பட்டார்.

குறிப்புகள் தொகு

  1. "About Us". Weekly Blitz. 15 February 2012 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120216125948/http://www.weeklyblitz.net/about/. பார்த்த நாள்: 21 December 2015. 
  2. International Federation of Journalists (11 July 2006). "Office of controversial magazine Weekly Blitz bombed, Bangladesh". Centre for Independent Journalism. Archived from the original on 28 September 2007.
  3. "Stand up for Salah Choudhury". ajc.org. 14 January 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Shoaib jailed for sedition
  5. Journalist gets seven-year jail sentence for decade-old articles
  6. "Non sono colpevole Choudhury Salah U." (in Italian). 25 April 2008.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலா_சவுத்ரி&oldid=3583934" இலிருந்து மீள்விக்கப்பட்டது