மொஸாட் (எபிரேயம்: המוסד‎, அரபு மொழி: الموساد‎), விரிவாக HaMossad leModi'in uleTafkidim Meyuchadim (புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனம்) (எபிரேயம்: המוסד למודיעין ולתפקידים מיוחדיםஅரபு மொழி: الموساد للاستخبارات والمهام الخاصةal-Mōsād lil-Istiḫbārāt wal-Mahāmm al-Ḫāṣṣah), இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகவர்.

புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனம்
The Institute for Intelligence and Special Operations
מדינת ישראל
המוסד למודיעין ולתפקידים מיוחדים

الموساد للاستخبارات والمهام الخاصة
"ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்"
(நீதிமொழிகள் XI:14)
மேலோட்டம்
உருவாக்கம் மார்கழி 13, 1949 இல் இணைப்பிற்கான மத்திய நிலையமாக
தலைமைக் காரியாலயம் டெல் அவீவ், இஸ்ரேல்
பணியாளர்கள் 1,200
நிறைவேற்றுனர் தமிர் பார்டோ, இயக்குனர்
முன்னைய முகவர் பிரதம மந்திரியின் அலுவலகம்
வலைப்பக்கம்
மொசாட் வலைப்பக்கம்


புலனாய்வு தகவல் திரட்டல், மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் என்பன மொஸாட்டின் பொறுப்புக்களாகும். இலக்குகளைக் கொல்லுதல், இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே துணை இராணுவப் படை செயற்பாடுகளை மேற்கொள்ளல், அலியா முகவர்கள் தடை செய்யப்பட்ட இடத்திலிருந்து யூதர்களை கொண்டு வருதல் மற்றும் உலக அளவில் யூதர்களை பாதுகாத்தல் என்பன மறைமுக நடவடிக்கைகளில் அடங்கும். அமான், சின் பெட் ஆகியவற்றுடன் இஸ்ரேலிய புலனாய்வு சமூகத்தின் உட்பொருட்களில் இதுவும் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆயினும், இயக்குனர் நேரடியாக பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.

குறிக்கோளுரை

தொகு

மொசாட்டின் பழைய குறிக்கோளுரை, (எபிரேயம்: בתחבולות תעשה לך מלחמה‎) என்றிருந்தது. இது வேதாகமத்தில் இவ்வாறு காணப்படுகின்றது. நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். (நீதிமொழிகள் 24:6)[1] இக் குறிக்கோளுரை இவ்வாறு பின்னர் மாற்றப்பட்டது. (எபிரேயம்: באין תחבולות יפול עם, ותשועה ברוב יועץ‎) இதன் அர்த்தம்: ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். (நீதிமொழிகள் XI:14)[2])

இதனையும் காண்க

தொகு

குறிப்புக்கள்

தொகு
  1. "By Way of Deception - Wikipedia, the free encyclopedia". En.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் December 4, 2011.
  2. http://www.ravmilim.co.il and http://morfix.nana10.co.il பரணிடப்பட்டது 2016-10-20 at the வந்தவழி இயந்திரம், Retrieved Mar 22, 2012

மேலதிக வாசிப்பு

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசாட்&oldid=3819241" இலிருந்து மீள்விக்கப்பட்டது