இஸ்ரேல் பாதுகாப்பு முகமை

இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை அல்லது சின் பெத் (Israel Security Agency or Shin Bet), உள்நாட்டு உள்வு அமைப்பாகும். இதன் தலைமையிடம் டெல் அவிவ் நகரம் ஆகும். இது உள்நாட்டு உளவுப் பணிகளை கவனிக்கும் இந்திய உளவுத்துறை போன்றதே. இஸ்ரேல் தனது வெளிநாட்டு உளவுப் பணிகளை மொசாட் அமைப்பு மூலம் செய்கிறது.

இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை
சின் பெத்
Common nameசபாக்
சுருக்கம்ஆங்கிலம்: ISA, உள்ளூர்: சபாக்
குறிக்கோள்Magen veLo Yera'e
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்8 பெப்ரவரி 1949; 75 ஆண்டுகள் முன்னர் (1949-02-08)[1]
அதிகார வரம்பு அமைப்பு
தேசிய நிலைஇஸ்ரேல்
செயல்பாட்டு அதிகார வரம்புஇஸ்ரேல்
ஆட்சிக் குழுஇஸ்ரேல் பிரதம அமைச்சர்
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்டெல் அவிவ்
துறை நிருவாகி
  • ரோனென் பார், இயக்குநர்
இணையத்தளம்
www.shabak.gov.il

அமைப்பு

தொகு

சபாக் அமைப்பு இஸ்ரேலின் நான்கு நடவடிக்கைக் குழுக்களைக் கொண்டது:[2]

  • அரபுத் துறை:இது இஸ்ரேல் நாட்டில் அரபுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானது. மேலும் மேற்குக் கரை மற்றும் காசாக்கரையில் உள்ள யூத குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு அளிப்பது. இதனை யூதத் துறை என்றும் அழைப்பர்.[3]
  • உள்நாட்டு பாதுகாப்புத் துறை:இஸ்ரேல் நாட்டின் உயர் மதிப்பு மிக்க தனிநபர்கள் மற்றும் இடங்களான அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
  • இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர் துறை:இத்துறை யூதப் பகுதிகளில் எதிர்-உளவுத்துறை மற்றும் நாசத்தைத் தடுப்பதற்கான துறையாக செயல்படுகிறது.[4]

இந்த அமைப்பு பாதுகாப்பு முகமையாக இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பகுதியாக செயல்படாது. இந்த அமைப்பு இஸ்ரேலிய பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் கீழ் செயல்படுகிறது.

விமர்சனங்கள்

தொகு

2023 இஸ்ரேல்-பாலத்தீனம் போரில் காசாக்கரையில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 7 அக்டோபர் 2023 அன்று 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய போதும், ஹமாஸ் குழுவினர் எல்லைப்புற வேலிகளை அகற்றிவிட்டு இஸ்ரேல் பகுதியில் புகுந்து நூற்றுக்கணக்கானவர்களை பணயக் கைதிகளாக சிறைபிடித்தும், கொன்றதற்கும் முன்கூட்டி உளவு அறிய தவறியதற்கு இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை பொறுப்பேற்றது.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The History of the ISA". Shabak. பார்க்கப்பட்ட நாள் 25 May 2011.
  2. "Profile: Israel's Shin Bet agency". BBC News. 2002-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.
  3. "Mission: Impossible". Uvda. Mako.
  4. "Mission: Impossible". Uvda. Mako.
  5. Israel's Internal Security Agency Takes Responsibility For Hamas Attack

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Israel Security Agency
என்பதில் ஊடகங்கள் உள்ளன.