சலீம் அன்சாரி

இந்திய அரசியல்வாதி

முகமது சலீம் அன்சாரி (Salim Ansari)(பிறப்பு 12 ஏப்ரல் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் ஆவார். அன்சாரி மாநிலங்களவை உறுப்பினராக 2010 முதல் 2016 வரை பதவி வகித்தார். இவர் தனது சொந்த ஊரான மவூவில் மாநில வாரியப் பள்ளியிலும், பட்டப்படிப்பு (இளங்கலை) மற்றும் முதுகலை கல்வியினை டி. சி. எசு. கே. பி. ஜி. கல்லூரியில் படித்தார். சலீம் அன்சாரி இரண்டு முறை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[1]

முகமது சலீம் அன்சாரி
Mohammad Salim Ansari
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை for உத்தரப் பிரதேசம்
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஏப்ரல் 1962 (1962-04-12) (அகவை 62)
மவூ, உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்சகுப்தா பர்வீன்
பிள்ளைகள்4 மகள்கள், 1 மகன்
வாழிடம்இந்தியா
முன்னாள் கல்லூரிதீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Detailed Profile: Shri Salim Ansari". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீம்_அன்சாரி&oldid=3926414" இலிருந்து மீள்விக்கப்பட்டது