சலீலா ஐதர் (Jalila Haider) என்பவர் பாக்கித்தான் நாட்டிலுள்ள குவெட்டா நகரத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞராவார். 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பாக்கித்தானின் குவெட்டாவில் பிறந்தார்.[3] அரசியல் ஆர்வலராகவும் கசாரா எனும் சிறுபான்மையினரான குவெட்டாவைச் சேர்ந்த முதல்பெண் வழக்கறிஞராகவும் இவர் அறியப்பட்டார். மேலும் பாக்கித்தான் குவெட்டாவில் துன்புறுத்தப்பட்ட கசாரா மக்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக வாதாடிவருகிறார்.[4][5] அவாமி தொழிலாளர் கட்சி உறுப்பினராகவும் , பலுசித்தான் அத்தியாயம் தலைவர் பெண்கள் சனநாயக முன்னணி கட்சியின் பகுதி தலைவராகவும், பாசுடூன் தாபுசு இயக்கத்தின் போராளியுமாவும் சலீலா செயல்பட்டார். பலவீனமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் பலுச்சிசுத்தான் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் இலாபநோக்கற்ற அமைப்பான 'நாங்கள் மனிதர்கள்- என்ற நிறுவனத்தை நிறுவினார்.

சலீலா ஐதர்
Jalila Haider
2020 ஆம் ஆண்டில் சலீலா ஐதர்
தாய்மொழியில் பெயர்جلیله حیدر
பிறப்புசலீலா ஐதர்
டிசம்பர் 10, 1988
குவெட்டா, பாக்கித்தான்
தேசியம்பாகிஸ்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பலுசிசுத்தான் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், பெண்ணியம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுமுதல் பெண் வழக்கறிஞர், பெண்கள் சனநாயக முன்னணி,[1][2]
அரசியல் பணியாளர் அவாமி பணியாளர் கட்சி
குறிப்பிடத்தக்க படைப்புகள்நாங்கள் மனிதர்கள் – பாக்கித்தான்'
பி.பி.சி. 2019 ஆம் ஆண்டு 100 பெண்கள் பட்டியலில் இடம்

சலிலா 2019 ஆம் ஆண்டில் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[6][7] சர்வதேச தைரியமான பெண்கள் வரிசையில் மாநில அமெரிக்க வெளியுறவுத் துறையில் மார்ச் 2020 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்டார்.[8]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சலீலா ஐதர் பாக்கித்தானின் பலுச்சிசுத்தான் குவெட்டாவில் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பிறந்தார். பலுச்சிசுத்தான் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளை ஆதரிப்பவராகவும் , அவர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தவறான செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் சலீலா செயல்பட்டார். பலூச் அரசியல் தொழிலாளர்களின் கட்டாய காணாமல் ஆக்கல்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக இவர் பிரச்சாரம் செய்தார். மேலும் அசாராக்களின் இனச் சுத்திகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தினார். பாசுடூன்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராகவும் இவர் பேசினார். மேலும் அவர்கள் அனைவரும் பாக்கித்தானின் அரசியலமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட தங்கள் வாழ்வுரிமைக்காகக் கோருவதால் அவர்களின் வலி நியாயமானதே என்று நம்பினார்.[9] 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குவெட்டாவில் நடந்த பாசுட்டூன் தகாபுசு இயக்கத்தின் கூட்டத்திலும் இவார் ஐதர் உரையாற்றினார், அதற்காக அவர் கடுமையான விமர்சனத்தையும் துன்புறுத்தலையும் எதிர் கொண்டார்.[10]

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அசாராச மூகத்தை குறிவைத்து நான்கு தனித்தனி தாக்குதல்கள் நடத்தப்பட்டது.[11] இதை எதிர்த்து சலீலா ஐதர் குவெட்டா பிரசுகிளப்பிற்கு வெளியே அமைதியான உண்ணா விரத முகாமை நடத்தினார். இந்த உண்ணா விரதம் சுமார் ஐந்து நாட்கள் நீடித்தது.[12][13][14]

ஐதர் மற்றும் பிற தலைவர்கள் பாக்கித்தானின் இராணுவத் தளபதி கமர் சாவேத் பச்வாவிடம் முறையிட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரினர்.மேலும் ஐதர் மற்றும் சமூகப் பெரியவர்கள் பலுசிசுதான் முதல்வர் மிர்அப்துல் குத்தூசு பிசன்சோ, மத்திய உள்துறை அமைச்சர் அசுசான் இக்பால், மாகாண உள்துறை அமைச்சர் மிர்சர் பராசபுக்தி ஆகியோருடன் முடிவற்ற பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்பு கமர் சாவேத் பசுவா பழங்குடியின பெரியவர்கள் மற்றும் அசாரா பெண்கள் உட்பட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்திய பிறகு போராட்டம் நிறைவடைந்தது. அதில் அச்சமூகத்தின் வாழ்வுரிமையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாளான்று பாக்கித்தானின் தலைமை நீதிபதி மியான்சாகிப் நிசார், அசாராவின் கொலைகள் குறித்து தன்னிச்சையாக அறிவித்தார். மே 11 அன்று நடந்த விசாரணையில், இந்த இலக்குவைக்கப்பட்ட கொலைகள் அசாராச மூகத்தின் இனச்சுத்திகரிப்பு என அழைக்கப்பட்டது. பின் இந்த கொலைகளுக்கு பின்னால் உள்ள சக்திகள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்க அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் நிசார் அறிவுறுத்தினார்.

இத்தகைய அரசியல் செயல்பாடுகளைத் தவிர சலீலா பல ஆண்டுகளாக பலுச்சிசுத்தான் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[15] பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். நீதி நியாயத்திற்காகவும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், குடும்பவன்முறை, திருமணச் சர்ச்சைகள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சொத்து உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளுக்கு சட்ட ஆலோசனைகளையும், கட்டணநிதி வழங்க முடியாத மக்களுக்கு இலவசசட்ட சேவைகளையும் செய்தார்.[16]

2018 ஆம் ஆண்டில், ஐதர் இசுலாமாபாத்தில் உள்ள தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இச்சான்கானியை சந்தித்தார். அவரிடம் உணவளிக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களை எதிர்கொள்ளும் அசாராபெண்களின் குறைகளை முன்வைத்தார்.

ஐதர் பலுச்சித்தானில் பெண்ணியப் போராட்டத்திற்கு ஆணாதிக்க நெறிமுறைகளுக்கு எதிராகப் போராடி, அவுரத் அணிவகுப்பு உட்பட அனைத்து முக்கிய இயக்கங்களையும் வழிநடத்தியுள்ளார்.[17]

மேற்கோள்கள் தொகு

  1. "Leadership". Women Democratic Front. Archived from the original on 2019-10-11. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Azaranica: Women Democratic Front's Jalila Haider announced indefinite hunger strike against the on-going target killings of Hazaras in Quetta.". Azaranica. 28 April 2018. http://azaranica.blogspot.com/2018/04/voa-urdu-quetta-protest.html. 
  3. "Jalila Haider". The Asia Foundation.
  4. "Pakistani Hazaras face a constant threat of targeted violence. Many say the security response has been ghettoizing and ineffective." (in en). Public Radio International. https://www.pri.org/stories/2018-05-31/pakistani-hazaras-face-constant-threat-targeted-violence-many-say-security. 
  5. Jalil, Xari (23 November 2018). "Jalila Haider – ardent advocate of Hazara community rights" (in en). Dawn (DAWN Media Group). https://www.dawn.com/news/1447081. 
  6. "BBC 100 Women 2019: Who is on the list?". 16 October 2019. https://www.bbc.com/news/world-50042279. 
  7. "Hazara woman from Pakistan named in BBC's 100 Women of 2019". geo.tv. https://www.geo.tv/latest/251423-hazara-woman-from-pakistan-named-in. 
  8. "2020 International Women of Courage Award". United States Department of State (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
  9. Malik, Abdullah (13 May 2018). "'This is not about Hazaras and non-Hazaras. It's a war between love and hate, and love will win'". Daily Times. https://dailytimes.com.pk/239823/this-is-not-about-hazaras-and-non-hazaras-its-a-war-between-love-and-hate-and-love-will-win/. 
  10. Arqam, Ali (June 2018). "The Venom Within" (in en). Newsline. https://newslinemagazine.com/magazine/the-venom-within/. 
  11. "Hazara community's hunger strike in Quetta continues for second day | Pakistan Today". Pakistan Today. https://www.pakistantoday.com.pk/2018/04/29/hazara-communitys-hunger-strike-in-quetta-continues-for-second-day/. 
  12. "Protesting Hazaras demand 'right to life'". outlookindia.com/. https://www.outlookindia.com/newsscroll/protesting-hazaras-demand-right-to-life/1298027. 
  13. Khan, Muhammad Ejaz (6 May 2018). "Last April in Quetta". TNS - The News on Sunday இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180817022251/http://tns.thenews.com.pk/last-april-quetta/#.XaF3BugzbIU. 
  14. "Pakistan: Hazara Shia Muslims end protest in Quetta over killings". Al Jazeera. https://www.aljazeera.com/news/2018/05/pakistan-hazara-shia-muslims-protest-quetta-killings-180502131145156.html. 
  15. Zafar, Mohammad (13 November 2017). "Hazara women defy the odds". https://tribune.com.pk/story/1556360/10-hazara-women-defy-odds/. 
  16. "Balochistan – ipd.org.pk". Archived from the original on 2019-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
  17. Ahmed, R Umaima (19 March 2019). "Global Voices - Aurat March breaking barriers against patriarchy in Pakistan" (in en). Global Voices. https://globalvoices.org/2019/03/19/aurat-march-breaking-barriers-against-patriarchy-in-pakistan/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீலா_ஐதர்&oldid=3553166" இலிருந்து மீள்விக்கப்பட்டது