சவகர் மான் பூங்கா
இந்தியாவின் தெலுங்கானாவிலுள்ள பூங்கா
சவகர் மான் பூங்கா (Jawahar Deer Park) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் மல்கச்கிரி மாவட்டத்திலுள்ள சமீர்பேட்டை நகரத்தில் அமைந்துள்ளது. இம்மான் பூங்கா 54 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மான்கள் பூங்காவில் வாழ்கின்றன.[1] சமிர்பேட்டை ஏரி அருகில் உள்ள காரணத்தால் ஏராளமான மான்கள் தாகத்தைத் தணிக்க ஏரிக்குச் செல்வதை இங்கிருந்து காணலாம்.
சவகர் மான் பூங்கா Jawahar Deer Park | |
---|---|
அமைவிடம் | இந்தியா, தெலங்கானா, சமீர்பேட்டை |
அருகாமை நகரம் | செகந்திராபாத்து |
பரப்பளவு | 54 ஏக்கர்கள் |
நிருவாக அமைப்பு | தெலுங்கானா அரசு |
மான்களைத் தவிர இங்கு மயில்களும் பல்வகை பறவைகளும் காணப்படுகின்றன. ஐதராபாத்தில் அறியப்படும் இரண்டு பட்டாம்பூச்சி பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும் மற்றொன்று சில்கூர் இரங்காரெட்டி மாவட்டத்திலுள்ள மிருகவானி தேசியப் பூங்காவாகும். மான் பூங்காவை தெலுங்கானா அரசு பராமரிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shameerpet deer park to have eco-tourism centre". 29 March 2007 – via www.thehindu.com.