மிருகவானி தேசியப் பூங்கா
மிருகவானி தேசியப் பூங்கா (Mrugavani National Park) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இது, ஐதராபாத்தின் மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மொய்னாபாத் மண்டலத்தின் சில்கூரில் அமைந்துள்ளது. மேலும், இது 3.6 சதுர கிலோமீட்டர் (1.4 சதுர மைல்) அல்லது 1211 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 600 வகையான தாவர இனங்களைக் கொண்டுள்ளது. சுமார் 350 புள்ளிமான்கள் இந்த பூங்காவில் உள்ளன. மேலும், இந்திய குழிமுயல், காட்டுப்பூனை, புனுகுப்பூனை, சாரைப்பாம்பு, கட்டுவிரியன், பூக்கொத்தி 200 க்கும் மேற்பட்ட மயில்கள் போன்ற உயிரனங்களும் உள்ளது. [1] [2] இன்று இந்த பூங்கா பல்லுயிர் பெருக்கத்தின் தாயகமாகும். பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளும் பூங்காவிற்குள் வழங்கப்பட்டுள்ளன.
மிருகவானி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
மிருகவானி தேசியப் பூங்காவில் சுடலைக் குயில் | |
தெலங்காணாவில் பூங்காவின் அமைவிடம் | |
அமைவிடம் | சில்கூர் அருகே, ஐதராபாத்து, தெலங்காணா |
அருகாமை நகரம் | ஐதராபாத்து |
ஆள்கூறுகள் | 17°21′19″N 78°20′17″E / 17.355228°N 78.338159°E |
பரப்பளவு | 1,211 ஏக்கர்கள் (4.90 km2) |
வரலாறு
தொகுஇது 1994இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
இடம்
தொகுஇந்தப் பூங்கா சில்கூர் பாலாஜி கோயிலுக்கு அருகில் உள்ளது, ஐதராபாத், மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Wild Life in Telangana :: Telangana Tourism". telanganatourism.gov.in. Archived from the original on 30 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Borah, Prabalika M. (11 January 2018). "Dear, how about some deer spotting?". பார்க்கப்பட்ட நாள் 18 April 2018 – via www.thehindu.com.