மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசியப் பூங்கா

மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசிய பூங்கா (Mahavir Harina Vanasthali National Park) என்பது இந்தியாவின் தெலங்காணா, மாநிலத்தின் ஐதராபாத்து, சாஹேப் நகர், வனஸ்தாலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு மான் தேசியப் பூங்காவாகும். இது 13,758 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. ஐதராபாத் நகரில் இது நுரையீரலுக்கு இதமான பசுமை நிறைந்த இடமாகும்.

மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசியப் பூங்கா
பூங்காவின் நுழைவு வாயிலில் மகாவீரரின் சிலை
Map showing the location of மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசியப் பூங்கா
Map showing the location of மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசியப் பூங்கா
அமைவிடம்தெலங்காணா, இந்தியா
ஆள்கூறுகள்17°36′N 78°47′E / 17.600°N 78.783°E / 17.600; 78.783
பரப்பளவு14.59 km2 (5.63 sq mi)
நிறுவப்பட்டது1975

வரலாறு

தொகு

1975 ஆம் ஆண்டில் சைனத் துறவி மகாவீரரின் 2500வது நிர்வாண ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த பூங்காவிற்கு அவரது பெயரிடப்பட்டது. பூங்கா அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் ஐதராபாத்தின் ஆட்சியாளர்களான நிசாமிற்கு தனிப்பட்ட வேட்டை மைதானமாக இருந்தது. இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் அதை மறுவாழ்வு செய்வதற்கும் ஒரு மான் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தத் தேசியப் பூங்காவை நிறுவ நிசாம் அரசு நன்கொடையாக வழங்கியது.

பூங்கா

தொகு
 
அக்காக்குயில்

இந்த தேசிய பூங்காவில் வாழும் விலங்குகளில் சில நூறு புல்வாய் ( ஆந்திராவின் மாநில விலங்கு ), முள்ளம்பன்றிகள், நீர்க்காகம் போன்ற பல பறவை இனங்களும் அடங்கும்.

சுற்றுச்சூழல் சுற்றுலா

தொகு

இந்தப் பூங்கா ஐதராபாத்தின் புறநகரில், ஐதராபாத் - விஜயவாடா சாலையில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து எளிதில் அணுகக்கூடிய தூரத்தில் உள்ளது. இந்த பூங்காவை தெலங்காணா அரசின் வனத்துறை பராமரிக்கிறது. வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் பூங்காவிற்குள் கிடைக்கின்றன.

விலங்குகளை கண்டுகளிக்க சஃபாரி வாகனம் மூலம் பூங்காவிற்குள் நுழைய விரும்பும் நபர்களுக்கு நுழைவு கட்டணம் உண்டு. நுழைவு கட்டண விவரங்கள் பூங்கா வலை தலத்தில் கிடைக்கின்றன


மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு