தெலங்காணா அரசு

(தெலுங்கானா அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெலங்காணா அரசு என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தை ஆட்சி செய்யும் அரசு ஆகும். மத்திய அரசினால் ஆளுநர் நியமிக்கப்படுவார். தெலங்காணா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மாநில முதல்வராக பொறுப்பேற்பார். இவர் மாநிலத்தின் உயர் ஆட்சிப் பொறுப்பாளர் ஆவார். ஆளுநர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இந்த மாநிலத்தின் சட்டமன்றம் ஐதராபாத்தில் உள்ளது.

தெலங்காணா அரசு
தலைமையிடம்ஐதரபாத்
செயற்குழு
ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன்
முதலமைச்சர்க. சந்திரசேகர் ராவ்
தலைமைச் செயலாளர்சோமேஷ் குமார், இ.ஆ.ப
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி
துணை சபாநாயகர்டி.பத்மா ராவ் கவுட்
உறுப்பினர்கள்119
மேலவைதெலங்காணா சட்ட மேலவை
தலைவர்குத்தா சுகேந்தர் ரெட்டி
துணைத் தலைவர்நேத்தி வித்யா சாகர்
மேலவை உறுப்பினர்கள்40
நீதித்துறை
உயர் நீதிமன்றம்தெலங்காணா உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிஉஜ்ஜல் புயான்

ஆட்சி

தொகு

அமைப்பு

தொகு

ஆளுநர்

தொகு

ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிப்பார். ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்கலாம். முப்பத்தைந்து வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கே ஆளுநராகும் தகுதி பெறுகின்றனர். முதல்வரைப் பொறுப்பேற்கச் செய்வது, மாநில அரசைப் பற்றிய அறிக்கைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்கிறார்.[1]

தற்போதைக்கு தமிழிசை சவுந்தரராஜன் என்பவர் ஆளுநராக இருக்கிறார்.

சட்டமன்றம்

தொகு
 
தெலுங்கானா சட்டமன்றக் கட்டிடம்

தற்போது 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். அவர் சட்டமன்றத்த்தை நடத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளார்.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

தெலங்காணாவை 33 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

நீதித் துறை

தொகு

சான்றுகள்

தொகு
  1. "The States". Government of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலங்காணா_அரசு&oldid=3606723" இலிருந்து மீள்விக்கப்பட்டது