சாங்குவாவ்
சாங்குவாவ் (Zankhvav) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். சூரத் மாநகராட்சியின் ஒரங்கமாக விளங்கும் இச்சிறு நகரம் ஒரு தொடருந்து நிலையயமாகவும் விளங்குகிறது.[1][2] சூரத் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவும், கோசாம்பா நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் சாங்குவாவ் நகரம் அமைந்திருக்கிறது.
சாங்குவாவ் Zankhvav | |
---|---|
அருகிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | சூரத் |
அரசு | |
• நிர்வாகம் | சூரத் மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் --> | 394440 |
தொலை பேசிக் குறியீடு | 91261-XXX-XXXX |
சட்ட மன்றத் தொகுதி | பர்தோலி |
குடிமை நிர்வாகம் | சூரத் மாநகராட்சி |
கோசாம்பா-சாங்குவாவ் தொடருந்து பாதையின் முடிவிடமாகவும் சாங்குவாவ் நகரம் இருக்கிறது. இத்தொடருந்து பாதை 1900 ஆம் ஆண்டில் ஒரு குறுகிய வழிப்பாதையாக கெயிக்வாட் வம்சத்தினரால் பரோடா மாநில தொடருந்தாக அமைக்கப்பட்டது.[3] தற்பொழுது இப்பாதை அகலப் பாதை போக்குவரத்தாக மாற்றப்பட்டு இயங்குகிறது.
கோசாம்பா-வேலச்சா-மாங்குரோல்-வாங்கால்- சாங்குவாவ் மாநில நெடுஞ்சாலை எண் 166 சாங்குவாவை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.
சாங்குவாவின் அஞ்சல் குறியீட்டு எண் 394440.[1]
சாங்குவாவ் நகரில் 1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாந்திநிகேதன் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது[4]. இதைத்தவிர ஒரு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சமூக சுகாதார மையம் முதலியன இவ்வூரில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 [1]
- ↑ "Zankvav in Surat district which falls in Bardoli constituency". Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ [2]"Census of India, 1911"
- ↑ [3][தொடர்பிழந்த இணைப்பு]