சாங் சீயீ

சாங் சீயீ (சீனம்:章子怡) (பிறப்பு:பெப்ரவரி 9, 1979 பீஜிங், சீனா) நன்கு அறியப்பட்ட சீன திரைப்பட நடிகையாவார். இவர் தற்சமயம் பல சீன, பன்னாட்டு திரைப்படங்களில் நடித்துவருகின்றார்.

சாங் சீயீ
章子怡
Zhang Ziyi Cabourg 2014 2.jpg
சாங் சீயீ
இயற் பெயர் 章子怡 சாங் சீயீ
பிறப்பு பெப்ரவரி 9, 1979 (1979-02-09) (அகவை 43)
சீனா பீஜிங், சீனா
நடிப்புக் காலம் 1996-தற்போது
குறிப்பிடத்தக்க படங்கள் குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் இல் ஜென்
அவுஸ் ஒவ் பிளையிங் டகர்ஸ் இல் மேயி
ரஷ் அவர் 2 இல் ஊ லீ

சரிதம்தொகு

சீனாவின் பீஜிங் நகரில் பிறந்த சாங் 11 வயதீல் பீஜிங் நாட்டிய அகடமியில் இணைந்தார். 15 வயதில் சீனாவின் பிரசித்தமான மத்திய நாடக அகடமியில் இணைந்தார்.

நடிப்பு வாழ்க்கைதொகு

19 வயதில் உலகப் புகழ் பெற்ற இயக்குனரான சாங் யிமோவுவின் த ரோட் ஓம் திரைப்படத்தில் நடிப்புத் துறையை ஆரம்பித்தார். இத்திரைப்படத்துக்கு இவருக்கு 2000 ஆம் ஆண்டு பர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருது வழங்கப்பட்டது. குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் திரைப்படத்தில் சாங்கின் நடிப்புக் காரணமாக புகழ்பெற்றார். இத்திரைப்படத்துக்காக டொறன்டோ திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.

ரஷ் அவர் 2 இவரது முதல் அமெரிக்கத் திரைப்படமாகும். இதன் போது இவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது.

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்_சீயீ&oldid=2916038" இருந்து மீள்விக்கப்பட்டது