சாசாங்க் மஞ்சரி
மகாராணி சாசாங்க் மஞ்சரி (Shashank Manjari) தேவி சாகிபா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகப் பீகார் மாநிலம் பலாமுவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராம்கர் ராஜாவின் முந்தைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் (நரேன் ராஜ் பரிவார்). மேலும் போராஹட்டின் மகாராஜா ஸ்ரீ ராஜா அர்ஜுன் சிங்கின் பேத்தி ஆவார். இவர் ராம்கர் ராஜாவின் மகாராஜா லட்சுமி நரேன் சிங் பகதூரைத் திருமணம் செய்து கொண்டார். மஞ்சரி, ஜரிதி சட்டமன்றத் தொகுதி மற்றும் தும்ரி சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 1969-ல் பீகாரின் நீர்ப்பாசன அமைச்சராகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு தேர்தலிலும் தோல்வியடையாததால் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.[1]
சாசாங்க் மஞ்சரி Shashank Manjari | |
---|---|
மகாராணி | |
நரேன் ராஜ் பரிவார் உறுப்பினர் - இராம்கர் ராஜ்யம் | |
காலம் | 1899 – 29 சனவரி 1987 |
முன்னையவர் | மகாராணி ரிகிநாத் கவுரி |
பின்னையவர் | மகாராணி லலிதா ராஜ்ய லட்சுமி |
பிறப்பு | 20 சூன் 1899 பொரஹத் அரண்மனை, சகர்தர்பூர், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 29 சனவரி 1987 இராஜ கோதி ஹசாரிபாக் |
துணைவர் | மகாராஜா லட்சுமி நரேன் சிங் பகதூர் |
குழந்தைகளின் பெயர்கள் | மகராஜா காமாக்யா நரேன் சிங் பகதூர், தளபதி மகாராஜ் குமார் பசந்த் நரேன் சிங் ஜி சாஹிப் |
மரபு | நரைன் |
தந்தை | மா. த. போராஹத் மகாராஜா ஸ்ரீ நர்பத் சிங் |
மதம் | இந்து சமயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.