காமாக்யா நரேன் சிங்
இராம்கரைச் சேர்ந்த மகாராஜா பகதூர் காமாக்கியா நரேன் சிங் பகதூர் (Kamakhya Narain Singh) (10 ஆகத்து 1916 – 7 மே 1970) , சார்க்கண்டு இராம்கர் இராச்சியத்தின் ஜமீந்தாரும் பின்னர் அரசியல்வாதியும் ஆவார். இவர் நரேன் வம்சத்தைச் சேர்ந்தவர்.
காமாக்யா நரேன் சிங் | |
---|---|
இராம்கர் இராச்சியத்தின் மகாராஜா பகதூர் | |
இராம்கர் இராச்சியத்தின் தலைவர் | |
காலம் | 1919 – 7 மே 1970 |
முன்னையவர் | மகாராஜா இலட்சுமி நரேன் சிங் |
பிறப்பு | பத்மா, இராம்கர் இராச்சியம், இந்தியா | 10 ஆகத்து 1916
இறப்பு | 7 மே 1970 கொல்கத்தா | (அகவை 53)
துணைவர் | மகாராணி இலலிதா ராஜ்ய இலட்சுமி |
மரபு | நரேன் |
தந்தை | மகாராஜா இலட்சுமி நரேன் சிங் பகதூர் |
தாய் | மகாராஜமாதா சசாங்க் மஞ்சரி Devi |
மதம் | இந்து சமயம் |
ஆரம்ப ஆண்டுகள்
தொகுஇராய்ப்பூரில் உள்ள இராஜ்குமார் கல்லூரியிலும், அஜ்மீர் மாயோ கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் தனது தந்தை இராஜ லட்சுமி நரேன் சிங் இறந்தவுடன் 1919 இல் இராம்கர் ராஜாவானார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் தனது சொந்த அரசியல் கட்சியை (இராம்கரின் ஜனதா கட்சி) உருவாக்கி, அப்போது பீகாரில் ஒரு முக்கிய தலைவராக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்திய முதல் குடும்பம் இவரது குடும்பம் (நரேன் ராஜ் பரிவார்) ஆகும். பீகார் நில உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இந்திய சத்திரிய மகாசபாவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இராஜ்குமார் கல்லூரியின் நிர்வாக குழு மற்றும் பொதுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும், பீகார் போர் குழுவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். [1] இவர் 1943 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் அகில் பாரதிய சத்ரிய மகாசபாவின் தலைவராகவும் பணியாற்றினார்.
இராம்கர் மாநிலம் முறையாக இந்தியக் குடியரசில் சேர்ந்ததையடுத்து இவர் 1946 இல் அரசியலில் நுழைந்தார். 1952 பீகார் சட்டமன்றத் தேர்தலில், இவர் தன்பாத்திலிருந்து சுதந்திராக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் ஒரு பிரபல சுதந்திர போராட்ட வீரரும் தொழிலாளர் உரிமைத் தலைவரான புருஷோத்தம் கே சௌகான் என்பவரிடம் தோற்றார். [2] [3] பின்னர் 1967ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராஜா பகதூரின் ஜனதா கட்சி ஆளும் காங்கிரசு அரசாங்கத்திற்கு கடுமையான போட்டியை வழங்கியது. இவரும் இவரது தம்பி வசந்த் நரேன் சிங் ஆகியோர் பீகார் முதல்வர் மகாமயா பிரசாத் சின்ஹா தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக ஆனார்கள். இவர் துணை முதல்வராக்கப்படாததால் கட்சியில் இருந்து விலகினார். 1960களின் பிற்பகுதியில், பீகாரில் ராஜபுத்திர மேலாதிக்கத்திற்கு எதிராக பிரபலமாக இருந்தார். ராஜ்புத் தலைவரான சத்யேந்திர நாராயண் சின்ஹாவுக்கு (அப்போது " பீகாரில் வரவிருக்கும் முதல்வர் " என்று கருதப்பட்டார்) எதிராக இருந்தார். இவரது கட்சி பின்னர் சுதந்திராக் கட்சியுடன் இணைந்தது. இவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் முக்கியமான அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக மாறினர். [4]
இறப்பு
தொகுஇதய நிறுத்தம் காரணமாக 7 மே 1970 அன்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 9 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ India, a reference annual. Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India.
- ↑ "Dhanbad :List of MLA's from 1952 to 1972". Dhanbad District Official Website. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012.
- ↑ http://www.telegraphindia.com/1080730/jsp/jharkhand/story_9620829.jsp
- ↑ "Ramgarh Raja Dead". The Indian Express: p. 7. 8 May 1970. https://news.google.com/newspapers?id=2YdlAAAAIBAJ&pg=2287%2C2885092. பார்த்த நாள்: 12 February 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Chaturvedi, Ritu & Bakshi, S. eds. (2007), "Bihar Through the Ages", Sarup & Sons Pg. 279
- Raja Bahadur Kamakhya Narain Singh's genealogical profile at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது சூலை 16, 2011)