சாஜிட்டேரியா நாட்டன்ஸ்

சஜிட்டேரியா நத்தான்ஸ் (Sagittaria natans) என்பது நீர்வாழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை பூக்கும் தாவரமாகும்.[1] இது வட ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களைத் தாயகமாக கொண்டது. இது செயற்கை நீர்வாழ் அழகுதாவரங்களாக தொட்டிகளிலும் செயற்கைக் குளங்களிலும் வளர்க்கப்படுகிறது. இது உருசியா கூட்டமைப்பு பகுதிகளிலும், பின்லாந்து, சுவீடன், மங்கோலியா, யப்பான், கொரியா, கசக்கஸ்தான் மற்றும் சீனா (குறிப்பாக கெய்லோங்சியாங், சிலின் மாகாணம், லியாவோனிங், உள் மங்கோலியா, சிஞ்சியாங் மாகாணங்கள்) போன்ற நாடுகளிலும் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது.[2][3]

சஜிட்டேரியா நத்தான்ஸ்

இந்நீர்வாழ்த் தாவரம் மெதுவாகச் செல்லும் மற்றும் நீர்த்தேக்கமுள்ள பகுதிகளான குளம் மற்றும் சிற்றோடைகளில் வளரும் தன்மையுடையது. நேர்வரிசையில் இதய அல்லது அம்பு வடிவ மிதக்கும் இலைகளைக் கொண்டுள்ளது.[4]

சான்றுகள்

தொகு
  1. The Plant List, Sagittaria natans
  2. "World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew". apps.kew.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
  3. "Sagittaria natans in Flora of China @ efloras.org". www.efloras.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
  4. Peter Simon von Pallas. 1776. Reise durch verschiedene Provinzen des russischen Reichs 3: 757, Sagittaria natans
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஜிட்டேரியா_நாட்டன்ஸ்&oldid=3843012" இலிருந்து மீள்விக்கப்பட்டது