சிலின் மாகாணம்

சிலின் அல்லது ஜிலின் (சீனம்: 吉林பின்யின்: Jílín; postal: Kirin), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாகக் கிழக்கே வட கொரியாவும் உருசியாவும், வடக்கே கெய்லோங்சியாங் மாகாணமும், தெற்கே லியாவோனிங் மாகாணமும் மேற்கே உள் மங்கோலியாவும் உள்ளன.

சிலின் மாகாணம்
吉林省
பெயர் transcription(s)
 • சீனம்吉林省 (Jílín Shěng)
 • சுருக்கம் (pinyin: Jí)
Map showing the location of சிலின் மாகாணம்
சீனாவில் அமைவிடம்: சிலின் மாகாணம்
பெயர்ச்சூட்டுfrom girin ula, a Manchu phrase meaning "along the river"
தலைநகரம்சிலின் நகரம்(1949-1954) சாங்சுன்(1954-தற்போது)
பெரிய நகரம்சாங்சுன்
பிரிவுகள்9 அரச தலைவர், 60 கவுண்டி மட்டம், 1006 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்பயான்கொலு
 • ஆளுநர்சியாங் சோலியாங்
பரப்பளவு
 • மொத்தம்1,87,400 km2 (72,400 sq mi)
 • பரப்பளவு தரவரிசை14வது
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்2,74,62,297
 • தரவரிசை21வது
 • அடர்த்தி150/km2 (380/sq mi)
  அடர்த்தி தரவரிசை23வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஆன்: 91%
கொரியர்: 4%
மஞ்சு: 4%
மொங்கோல்: 0.6%
ஊய்: 0.5%
 • மொழிகளும் கிளைமொழிகளும்Northeastern Mandarin, Hamgyŏng Korean
ஐஎசுஓ 3166 குறியீடுCN-22
GDP (2014)CNY 1.38 trillion
US$ 224.7 billion (22வது)
 • per capitaCNY 50,196
US$ 8,171 (11வது)
HDI (2010)0.715[3] (high) (10வது)
இணையதளம்www.jl.gov.cn
சிலின் மாகாணம்
சீனம் 吉林
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

வரலாறு

தொகு

ஆதி காலத்தில் இப்பிரதேசம் சியான்பேய், கொரிய, மோகி மற்றூம் வுயு ஆகிய பல்வகைப்பட்ட மக்கள் வாழ்ந்த இடமாகும்[4].

புவியியல்

தொகு

சிலின் மாகாணம் வடகிழக்கு சீனாவின் மத்திய பகுதியில் உள்ளது. இம்மாகாணத்தில் 136 வகையான இயற்கைக் கனிமப் படிவுகள் காணப்படுகின்றன. இங்கு பெருமளவிலான சீன மருத்துவத் தாவரங்களும் மூலிகைகளும் உள்ளன. இங்கு எண்ணெய், எரிவாயு, இரும்புத்தாது மற்றும் கனிமங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இதன் நிலப்பரப்பு தென்மேற்குப் பிரதேசம் உயர்ந்ததாகவும் வடமேற்கு நோக்கித் தாழ்ந்து செல்வதாகவும் உள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

இம்மாகாணம் 9 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 60 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1006 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அரசியல்

தொகு

சீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.

பொருளாதாரம்

தொகு

2011இல், சிலின் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1053.1 பில்லியன் யுவான் ($167.1 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 2009இல் 26,289 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது.

நெல், மக்காச்சோளம், சோளம் என்பன இதன் பிரதான விவசாய உற்பத்திப் பொருட்களாகும்.

மக்கட் பரம்பல்

தொகு

இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் கொரியர்கள் (1.15 மில்லியன் மக்கள்), மஞ்சு இனக்குழு (1 மில்லியன் மக்கள்), மொங்கோல் இனக்குழு (1.7 இலட்சம் மக்கள்), ஊய் இனக்குழு (1.2 இலட்சம் மக்கள்) மற்றும் சிபே இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இனப்பரம்பல்
இனம் மக்கட்டொகை சதவீதம்
ஆன் சீனர் 24,348,815 90.85%
கொரியர்கள் 1,145,688 4.27%
மஞ்சு இனக்குழு 993,112 3.71%
மொங்கோலியர் 172,026 0.64%
ஊய் இனக்குழு 125,620 0.47%

இங்கு மக்கள் விடுதலை இராணுவ சேவையிலுள்ளோர் உள்ளடக்கப்படவில்லை.

மூலம்: Department of Population, Social, Science and Technology Statistics of the National Bureau of Statistics of China and Department of Economic Development of the State Ethnic Affairs Commission of China, eds. Tabulation on Nationalities of 2000 Population Census of China. 2 vols. Beijing: Nationalities Publishing House (民族出版社), 2003. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-05425-5)

சுற்றுலா

தொகு

கோகுர்யோ இராச்சியத்தின் தலைநகரங்களும் கல்லறைகளும் என அழைக்கப்படும் பிரதேசம் உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக உள்ளது. பேக்து மலை, சொர்க்க வாவி என்பன புகழ்பெற்ற சுற்றுலா மையங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Doing Business in China - Survey". Ministry Of Commerce - People's Republic Of China. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "ஐ.நா. அறிக்கை" 《2013中国人类发展报告》 (PDF) (in சீனம்). United Nations Development Programme China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  4. 前言[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலின்_மாகாணம்&oldid=3554246" இலிருந்து மீள்விக்கப்பட்டது