சாண்டோக்கான்

சாண்டோக்கான் (Sandokan ) என்பவர் இத்தாலியப் படைப்பாளர் எமீலியோ சால்கரி 1883இல் வெளியிட்ட ஒரு புதினத்தில் வருகின்ற கடற்கொள்ளைக்காரர் ஆவார். சாண்டோக்கான் பதினொரு சாதனைப் புதினங்களில் முதன்மைக் குணச்சித்திரமாகத் தோன்றுகிறார். தெற்குச் சீனக் கடல் பகுதிகளில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் "மலேசியப் புலி" என்பதாகும்.

சாண்டோக்கான் (Sandokan)
"மோம்ப்ராசெம் புலிகள்" அட்டைப்பக்கத்தில் சாண்டோக்கான், மரியான்னா (வெளியீடு: 1900)
உருவாக்கியவர் எமீலியோ சால்கரி
வரைந்தவர்(கள்) கபீர் பேதி, ஸ்டீவ் ரீவ்சு
தகவல்
பிற பெயர்மலேசியப் புலி
பால்ஆண்
தொழில்கடற்கொள்ளை; போர்
துணைவர்(கள்)மரியான்னா கில்லங்க்
தேசிய இனம்போர்னியோ

சாண்டோக்கான் புதினங்கள்

தொகு

இத்தாலியப் படைப்பாளராகிய எமீலியோ சால்கரி என்பவர் பல புதினங்கள் எழுதியுள்ளார். அப்புதினங்களில் அவர் அறிமுகப்படுத்திய தலைசிறந்த இரு குணச்சித்திரங்கள் "சாண்டோக்கான்", "யானெசு" என்போர். இந்த இருவரும் கடற்கொள்ளைக்காரர்கள் ஆவர். சால்கரியின் "மோம்ப்ராசெம் புலிகள்" (The Tigers of Mompracem) என்னும் புதினத்தில் மேற்கூறிய இரு கடற்கொள்ளைக்காரர்களும் நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய கப்பற்படையினரை இடையறாது தாக்குகின்றனர். நெதர்லாந்தியரும் பிரித்தானியரும் அவர்களை அழித்தொழிக்க வழிதேடுகின்றனர்.

பின்னர் வெளியான புதினங்களில் சாண்டோக்கானும் யானெசும் சாரவாக அரசராகிய சேம்சு புரூக் என்பவரை எதிர்த்துப் போராடுகின்றனர். பின்னர் இருவரும் இந்தியாவுக்குப் பயணமாகி, அங்கே காளியை வழிபடுகின்ற வழிப்பறிக்கொள்ளைக்காரர்களாகிய தக்கர்களோடு மோதுகின்றனர்.

புதினங்களின் தலைப்புகள்

தொகு
  • The Mystery of the Black Jungle (I Misteri della Jungla Nera, 1895)
  • The Pirates of Malaysia (I Pirati della Malesia, 1896)
  • The Tigers of Mompracem (Le Tigri di Mompracem, 1900)
  • The Two Tigers (Le due Tigri, 1904)
  • The King of the Sea (Il Re del Mare, 1906)
  • Quest for a Throne (Alla conquista di un impero, 1907)
  • Sandokan Fights Back (Sandokan alla riscossa, 1907)
  • Return to Mompracem (La riconquista del Mompracem, 1908)
  • The Brahman (Il Bramino dell'Assam, 1911)
  • An Empire Crumbles (La caduta di un impero, 1911)
  • Yanez' Revenge (La rivincita di Yanez, 1913)

இறுதியாகக் குறிப்பிட்ட இரு நூல்களும் சால்கரியின் மறைவுக்குப் பின் வெளியாயின.

சாண்டோக்கானின் சாதனைகளை விவரிக்கின்ற பிற புதினங்கள் இத்தாலிய படைப்பாளர்களாகிய லூயிஜி மோட்டா, எமீலியோ ஃபான்செல்லி, மற்றும் சால்கரியின் மகன் ஓமார் என்பவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

திரைப்படங்கள்

தொகு

1960களில் அமெரிக்க நடிகர்கள் நடித்த பல சாண்டோக்கான் படங்கள் இத்தாலியில் உருவாக்கப்பட்டு, பன்னாட்டு வெளியீடுகளாக வழங்கப்பட்டன.

  • Sandokan the Great (Sandokan, la tigre di Mompracem) (1963)
  • Sandokan Fights Back (Sandokan alla riscossa) (1964)
  • Sandokan - The Pirate of Malaya (I pirati della Malesia) (1964)
  • Sandokan Against The Leopard of Sarawak (Sandokan contro il leopardo di Sarawak) (1964)

முதல் படத்திலும் மூன்றாவது படத்திலும் சாண்டோக்கானாக ஸ்டீவ் ரீவ்சு (Steve Reeves) நடித்தார். இரண்டாவது படத்திலும் நான்காம் படத்திலும் ரே டாண்டன் (Ray Danton) நடித்தார்.

தொலைக்காட்சித் தொடர்

தொகு

1976இல் இந்தியத் திரைப்பட நடிகர் கபீர் பேதி சாண்டோக்கானாக நடித்த ஆறு பகுதி தொலைக்காட்சித் தொடர் வெளியானது. அது ஐரோப்பிய தொலைக்காட்சிக்காக செர்ஜியோ சொல்லீமா என்ற இயக்குநரால் உருவாக்கப்பட்டது.

தொலக்காட்சித் தொடரில் கீழ்வரும் பகுதிகள் ஒளிபரப்பாயின:

  • கடத்தல் (Hijack)
  • மர்ம இளவரசன் (Mysterious Prince)
  • புலி வேட்டை (The Hunt for Tiger)
  • சவால் (The Offer)
  • சதி (Betrayal)
  • சண்டை (The battle)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டோக்கான்&oldid=3791807" இலிருந்து மீள்விக்கப்பட்டது