சாதியா கோச்சர்

சாதியா கோச்சர் (Saadiya Kochar) ஓர் இந்தியப் பெண் புகைப்படக்காரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். [1]

வாழ்க்கை தொகு

ஜம்முவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் இவர் பிறந்தார்.  இவர் தில்லியில் உள்ள ஒரு கிறித்துவப் பள்ளியில் பயின்றார். மக்கள் தகவல் தொடர்பியல் பயின்ற இவர், ஓ.பி. ஷர்மா என்ற புகைப்படக் கலைஞரின் கீழ் திரிவேணி கலா சங்கத்தில் கல்வி கற்கச் சென்றார்.  ஆஸ்திரேலியாவின் ஐ.சி.பி.பியில் புகைப்படம் எடுத்தலில் தொழிற்கல்வி பட்டம் பெற்றார். இவருக்கு 24 வயதாக இருந்தபோது, அவர் தனது முதல் புத்தகமான பீயிங் ... என்பதனை வெளியிட்டார். [2]

கோச்சர், காஷ்மீரில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளார். கோச்சர் தனது புகைப்படங்களை ஒரு சில தனி நிகழ்ச்சிகள் மூலமும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் குழு நிகழ்ச்சிகளின் மூலமும் காட்சிப்படுத்தியுள்ளார்.[சான்று தேவை] .  மனித வடிவம் குறித்த இவரது பீயிங் எனும் நூல் 2004 இல் வெளியிடப்பட்டது. காஷ்மீர் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீர பண்டிதர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் குறித்து லாஸ் என்ற நிகழ்பட கலைத் திட்டத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது காஷ்மீரில் பயணம் செய்தும் அங்கேயே பணிபுரிந்தும் வருகிறார். [3]

சான்றுகள் தொகு

  1. "Artist's Directory". Galleryartanddesign.com. Archived from the original on 2011-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  2. "24-year-old Saadiya Kochar frames 15 years of her life in a book of photographs: Your Week - India Today". Indiatoday.intoday.in. 2004-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  3. "A story of loss". Deccan Herald (in ஆங்கிலம்). 2012-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதியா_கோச்சர்&oldid=3553396" இலிருந்து மீள்விக்கப்பட்டது