சாந்தாஜி கோர்படே
சாந்தாஜி கோர்படே (Santaji Mahaloji Ghorpade),(1645–1696) சத்திரபதி இராஜாராம் ஆட்சியின் போது மராத்தியப் பேரரசின் புகழ்பெற்ற 6-வது தலைமைப் படைத்தலைவர் ஆவார். 1689 முதல் 1696-ஆம் ஆண்டு முடிய இரண்டு பத்தாண்டுகளில் நடைபெற்ற முகலாய-மராத்தியப் போர்களில் படைத்தலைவர் தானாஜி ஜாதவ்வுடன் தொடர்ந்து பங்கெடுத்தவர். இவர் கொரில்லாப் போர் முறையில் தம்படைகளை முகலாயர் படைகளுக்கு எதிராகப் போரிட்டதில் புகழ்பெற்றவர்.
இளமை வாழ்க்கை
தொகுபோன்சலே குலத்தின் ஒரு பிரிவினான கோர்படே குடும்பத்தில் பிறந்த சாந்தாஜி கோர்படே 1660-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மராத்தியப் பேரரசர் சம்பாஜியின் படைத்தலைவரான மலோஜி கோபர்ப்டேயின் மூன்று மகன்களில் மூத்தவர் சாந்தாஜி கோர்படே ஆவார். சத்திரபதி இராஜாராம் ஆட்சியின் போது சாந்தாஜி கோர்படே, மராத்தியப் பேரரசின் புகழ்பெற்ற 6-வது தலைமைப் படைத்தலைவராக பதவியேற்றார்.
1686-ஆம் ஆண்டில் செஞ்சிப் பகுதியிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்காக சாந்தாஜி கோர்டேயையும், மூத்த படைத்தலைவர் கேசவ திருமால் பிங்களேயையும் 17,000 பேர் கொண்ட படைகளுடன் சத்திரபதி இராஜாராம் அனுப்பினார். 1689 இல் சம்பாஜி முகலாயர்களிடம் பிடிபட்டபோது, படைத்தலைவர் சாந்தாஜி கோர்படேவின் தந்தை படைத்தலைவர் மலோஜி கோர்படே பாதுகாப்பிற்காக சம்பாஜியுடன் உடனிருந்தார். மேலும் மலோஜி சங்கமேஸ்வரில் சம்பாஜியின் பாதுகாப்பில் உயிர் துறந்தார்.
முகலாய-மராத்தியப் போரில் சாந்தாஜி கோபர்படேவின் பங்கு
தொகுமராத்தியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் ஆட்சியின் துவக்கத்தில், 1689-ஆம் ஆண்டில் சாந்தாஜி கோபர்படே 5,000 படைவீரர்களுக்கு தலைமை தாங்கினார். செப்டம்பர் 1689-ஆம் ஆண்டில் பன்காலா கோட்டை போரில், படைத்தலைவர் தானாஜி ஜாதவ்வுடன் இணைந்த சாந்தாஜி கோபர்படே அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சேக் நிஜாமின் படைகளை வென்றதுடன், அவர்களின் குதிரைகள், யானைகள் மற்றும் கருவூலங்களை பறிமுதல் செய்தார்.
1689–1690 காலத்தில் சத்திரபதி இராஜாராம் செஞ்சிக் கோட்டையில் பாதுகாப்பாக இருந்த போது, படைத்தலைவர்கள் சாந்தாஜி மற்றும் தானாஜி ஒன்றிணைந்து முகலாயப் படைகளை, கர்நாடகாப் பகுதியில் நுழைவதை தடுத்தனர். டிசம்பர் 1690-ஆம் ஆண்டில் மராத்திய அமைச்சர்கள் இராமசந்திர பந்த் அமத்யா மற்றும் சங்கர் நாராயணன் மேற்பார்வையில் சாந்தாஜி கோபர்படே மற்றும் தானாஜி ஜாதவ் மராத்திய தலைமைப் படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
25 மே 1690 அன்று முகலாய படைத்தலைவர் ருஸ்தம் கானை வென்று சாத்தாரா நகரத்தை தானாஜி ஜாதவுடன் இணைந்து சாந்தாஜி கோர்படே கைப்பற்றினார். இதனால் முகலாயர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த வெற்றிக்காக சூலை 1692-ஆம் ஆண்டில், சாந்தாஜி கோபர்டேவுக்கு தேஷ்முக் விருது வழங்கப்பட்டது.
14 டிசம்பர் 1692 அன்று சந்தாஜி, முகலாயப் படைத்தலைவர் அலிமார்தன் படைகளை வென்று செஞ்சிக் கோட்டை கைப்பற்றினார்.
இறப்பு
தொகு1696-ஆம் ஆண்டில் சந்தாஜி கோர்படே முகலாயப் படைத்தலைவரால் கொல்லப்பட்டார்..[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sarkar, Jadunath (1947). Maasir-i- Alamgiri.
ஊசாத்துணை
தொகு- 'Marathi Riyasat Volume II' (Marathi) by Govind Sakharam Sardesai
- 'Marathyanche Svatantra Yuddha' (Marathi) by Setu Madhavrao Pagadi
- 'Aurangzeb' (English) by Sir Jadunath Sarkar
- Book by Mahesh Tendulkar at Sahyadri books பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம்
- https://web.archive.org/web/20120622164358/http://www.pethvadgaon.com/