சாந்தினி கோவிந்தன்
சாந்தினி கோவிந்தன் (Santhini Govindan)(நீ குட்டி) ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியம் எழுதியவர். இவரது படைப்புகளில் கவிதைகள், படப் புத்தகங்கள் மற்றும் அனைத்து வயதினருக்கான சிறுகதைகளும் அடங்கும். சாந்தினியின் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[1] இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் பத்திரிகைகள் மற்றும் தேசிய நாளிதழ்களில் வெளியிடப்பட்ட குழந்தைகளுக்கான கட்டுரைகள், கதைகள் மற்றும் அம்சங்களையும் இவர் எழுதியுள்ளார். கோவிந்தன் மும்பை மற்றும் பிற இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார், மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மட்டத்தில் படைப்பு எழுத்துக்கள் குறித்து கற்பித்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசாந்தினி கோவிந்தன், கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில், சாந்தா குட்டி மற்றும் மாதவன் குட்டி ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.[1] இவர் செக்கோசிலோவாக்கியாவில் உள்ள பிராகா, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மற்றும் இலங்கையின் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பன்னாட்டுப் பள்ளிகளில் படித்தார். இங்கு இவரது தந்தை இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டார். 1977-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1979ல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
தொகு1986ஆம் ஆண்டில், புது தில்லியில் உள்ள குழந்தைகள் புத்தக அறக்கட்டளை ஏற்பாடு செய்த குழந்தைகள் புத்தகங்களை எழுதுபவர்களுக்கான தேசியப் போட்டியில் தனது கைக்குழந்தைக்கு இவர் உருவாக்கிய கதைப்போட்டி மூல எழுத ஆரம்பித்தார்.[2] ஏ டேல் ஆப் டப்பி டர்டில் ("A Tale of Tuffy Turtle") கதை, இப்போட்டியில் பரிசு வென்றது. இது இவரது எழுத்து உலக வாழ்க்கையின் தொடக்கமாக இருந்தது.[3]
சிறுகதை வடிவில் குழந்தைகளுக்கான வரலாற்றுப் புனைகதைகளை எழுதுவதற்காக 1996ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கலாச்சாரத் துறையிடமிருந்து கோவிந்தனுக்கு இலக்கியத்தில் இரண்டு ஆண்டு இளநிலை நிதி உதவி வழங்கப்பட்டது.[2] பின்னர் இவருக்கு அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையால் இலக்கியத்தில் இரண்டு ஆண்டு மூத்த ஆய்வாளர் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்தியாவின், "இந்தியாவில் ஆங்கிலத்தில் குழந்தைகள் இலக்கியம்" என்ற ஆராய்ச்சி திட்டத்தித்தினை இதன் மூலம் இவர் முடித்தார்.[4] சூலை 2001-ல், அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவாவில் நடைபெற்ற வருடாந்திர சிறப்பம்சங்கள் அறக்கட்டளை எழுத்தாளர்கள் பட்டறையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட முதல் இந்திய எழுத்தாளர் ஆவார்.[1][3]
ஹைலைட்ஸ் ஆரம்பக் கல்வி அறக்கட்டளைத் திட்டத்திற்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பள்ளித் திட்டம் மற்றும் முதன்மை பிளஸ் திட்டத்திற்குத் தயாராகி வருவதற்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி உள்ளிட்ட குழந்தைகளுக்கான சிறப்பம்சங்களுக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[1][3]
கோவிந்தன் 1987 முதல் 2016 வரை குழந்தைகள் புத்தக அறக்கட்டளை நடத்திய குழந்தைகள் புத்தக எழுத்தாளர்களுக்கான தேசியப் போட்டியில் வெவ்வேறு பிரிவுகளிலும் வெவ்வேறு வயதினருக்காகவும் தனது கதைகளுக்காக இருபது விருதுகளை வென்றுள்ளார்.[3][1]
அக்டோபர் 2018-ல், இந்திய நாடாளுமன்றத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக, சபாநாயகரின் முயற்சியின் மூலம், சாந்தினி கோவிந்தனுக்கு இரண்டு ஆண்டு மக்களவை ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்றார்.
சந்தமாமா என்ற குழந்தைகளுக்கான மாதாந்திர இதழில் 2011 முதல் இரண்டு ஆண்டுகள் வரலாற்றுப் புனைகதைகள் மற்றும் புராணங்கள் குறித்து இரண்டு கட்டுரைகளை சாந்தினி எழுதினார்.
சாந்தினியின் புத்தகம், தி ஆங்கட் ஆப் அப்பு (The Anger of Apsu), (சி.பி.டி., புது தில்லியால் வெளியிடப்பட்டது) தொடக்கக் கல்வித் துறை, ஆரம்பக்கால எழுத்தறிவுத் திட்டம், தேசியக் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை இலக்கியங்களின் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், நிலை 2 பரிந்துரைத்தது., (தரநிலை III- IV) 2014. 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, (சிந்து சமவெளி நாகரிகத்தின் மீது) அசோகாவின் நாட்குறிப்பு மற்றும் மராட்டிய மன்னர் சிவாஜி பற்றிய தி மேஜிக்கல் மராத்தா உள்ளிட்ட இந்திய வரலாற்றில் குழந்தைகளுக்காகக் கோவிந்தன் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
2019-ல், இவர் குழந்தைகளுக்கான புத்தகமான தி மேஜிக் ஆஃப் கர்லி வோர்லியை வெளியிட்டார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசாந்தினி கே. எம்.கோவிந்தனை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும் இவர் இந்தியாவில் மும்பையில் வசித்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Pain, Paromita (October 11, 2003). "Of giants and centipedes". The Hindu இம் மூலத்தில் இருந்து நவம்பர் 12, 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031112010409/http://www.hindu.com/thehindu/yw/2003/10/11/stories/2003101101110300.htm.
- ↑ 2.0 2.1 STP Team (May 5, 2015). "Female Children’s writers your kids should read". SheThePeople.TV. https://www.shethepeople.tv/news/female-childrens-writers-your-kids-should-read/.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Anthikad-Chhibber, Mini (September 18, 2003). "Small wonder". The Hindu இம் மூலத்தில் இருந்து மார்ச் 4, 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040304042054/http://www.hindu.com/thehindu/mp/2003/09/18/stories/2003091800010300.htm.
- ↑ Kaur, Jaswant (September 15, 2002). "Stories from the lap of nature". The Tribune India. https://www.tribuneindia.com/2002/20020915/spectrum/book3.htm.
- ↑ Bhattacharyya, Priyanka (2019). "THE MAGIC OF CURLY WHORLY". The Book Review Literacy Trust. https://www.thebookreviewindia.org/priyanka-bhattacharyya/.