சாந்தி சுவரூப் தவான்

இந்திய நீதிபதி

சாந்தி சுவரூப் தவான் (Shanti Swaroop Dhavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1906 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு தந்திரசாலியாகவும் நீதிபதியாகவும் அறியப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் 6 ஆவது ஆளுநராக இருந்தார்.

சாந்தி சுவரூப் தவான்
Shanti Swaroop Dhavan
மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
19 செப்டம்பர் 1969 – 21 ஆகத்து 1971
முன்னையவர்தீப் நாராயண் சின்கா (பொறுப்பு)
பின்னவர்அந்தோனி லான்சிலோட் டயசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூலை 1906
தேரா இசுமாயில் கான்
இறப்பு1 சனவரி 1978(1978-01-01) (அகவை 71)

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

சாந்தி சுவரூப் தவான் 1906 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதியன்று ராய் பகதூர் பாலி ராம் தவானுக்கு பிறந்தார், பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வாவில் உள்ள தேரா இசுமாயில் கான் நகரம் இவருடைய பிறந்த ஊராகும்.[1] லாகூரிலுள்ள பார்மன் கிறித்துவக் கல்லூரியிலும்,[2] கேம்பிரிட்ச்சில் உள்ள இம்மானுவேல் கல்லூரியிலும் (அங்கு இவர் கேம்பிரிட்ச்சு சங்கத்தின் தலைவரானார்),[3] இலண்டன் இன்சு ஆஃப் கோர்ட், மிடில் டெம்பிளில் சட்டமும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் 28 சூன் 1958 முதல் 2 சூலை 1967 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார்,[4] இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[5] தவான் பின்னர் ஐக்கிய இராச்சியத்திற்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[6]

இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: ரவி எசு. தவான், அலகாபாத் மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்களின் நீதிபதியாக இருந்தார்; இராச்சீவ் தவான்,[7] தனது தந்தையைப் போலவே கேம்பிரிட்ச்சு சங்கத்தின் தலைவரானார்.[3] இப்போது இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரபலமான மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவரது மகள் ராணி தவன் சங்கர்தாசு ஓர் இந்திய சமூக வரலாற்றாசிரியர் மற்றும் சிறை சீர்திருத்தத்தில் உலகளாவிய நிபுணர் ஆவார். தண்டனைச் சீர்திருத்தம் மற்றும் நீதிச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தண்டனைச் சீர்திருத்த பன்னாட்டு தலைவராகவும் உள்ளார்.

சாந்தி சுவரூப் தவான் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21, 1971 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். அச்சோய் முகர்ச்சியின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்தும் 1971 ஆம் ஆண்டில் இவரது மூன்றாவது அமைச்சு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்தும். சனாதிபதி ஆட்சி விதிக்கப்பட்டதால் தவானின் ஆளுநர் பதவிக்காலம் முடிந்தது.[8]

1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று சாந்தி சுவரூப் தவான் தனது 71 ஆவது வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Paul, Renu. "South Asians at the Inns of Court: Middle Temple, 1863-1944" (PDF).
  2. Iran Society (1970). Indo-iranica. 23. https://books.google.com/books?id=ZuZtAAAAMAAJ&q=Shanti+swaroop+dhavan. 
  3. 3.0 3.1 "About Rajeev Dhavan", rajeevdhavan.com. Accessed 31 July 2020.
  4. "List of Former Hon'ble Judges".
  5. "SUPREME COURT OF INDIA: LIST OF SENIOR ADVOCATES" (PDF).
  6. Gopal, S (1972). Selected works of Jawaharlal Nehru. Orient Longman. p. 546.
  7. "Late diplomat?s wife passes away". Hindustan Times (in ஆங்கிலம்). 2006-11-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  8. Dasgupta, Surajit (1992). West Bengal's Jyoti Basu: A Political Profile. Delhi: Gian Publishing House. pp. 34–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121204200.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_சுவரூப்_தவான்&oldid=3822104" இலிருந்து மீள்விக்கப்பட்டது