சாந்தி திரையரங்கம் (சென்னை)

சாந்தி திரையரங்கம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை அண்ணா சாலையில், அண்ணா சிலைக்கு அருகில் சிவாஜி கணேசன், தன் மகள் சாந்தியின் பெயரால் நிறுவியதாகும். இத்திரையரங்கு, அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் காமராசரால் 1961-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. குளிர்சாதன வசதியுடன் சென்னையில் தொடங்கப்பட்ட முதல் திரையரங்கம் சாந்தி திரையரங்கம்.

சாந்தி திரையரங்கம் சென்னை மாநகரின் ஒரு அடையாளக் குறியாக விளங்கியது. இத்திரையரங்கில் முதலில் 1961 மார்ச் மாதம் 16 ஆம் தேதி திரையிடப்பட்ட திரைப்படம், ஏ. பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாவ மன்னிப்பு ஆகும். பின்னர், சிவாஜி கணேசன் இந்த திரையரங்கத்தை வாங்கினார். ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படம் சாந்தி திரையரங்கில் தொடர்ந்து 888 நாட்கள் திரையிடப்பட்டு வரலாறு படைத்தது. மே 2005-ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி மற்றும் சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற சாந்தி திரையரங்கத்தை ரஜினிகாந்த் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திறந்து வைத்தார்.[1] இத்திரையரங்கில் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

மாற்றம்

தொகு

16 மே 2016-அன்று 53 ஆண்டு காலம் திரையரங்கமாக இருந்த கட்டிடம் சாந்தி திரையரங்கை இடித்து பல்நோக்கு வணிக வளாகமாக மாற்றுவதற்காக, சாந்தி மற்றும் சாய்சாந்தி திரையரங்கங்கள் மூடப்பட்டது. [2] இங்கு ஒரு வர்த்தகக் கட்டிடம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. "திரையரங்கத்தின் வரலாறு". Archived from the original on 2014-09-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-15.
  2. "மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!". Archived from the original on 2016-05-21. பார்க்கப்பட்ட நாள் 2016-05-17.
  3. Shanti theatre goes the multiplex way too