சாபுதாளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாபுதாளம் நாடோடி கானத்தினின்றும் வந்த புராதன தாளங்களில் ஒன்று. இதனை சாய்ப்பு தாளம் என்றும் அழைப்பதுண்டு. இத்தாளத்தை இரண்டு தட்டுக்களாகப் போடுவது வழக்கம். வீச்சும் தட்டுமாகக் கூட இந்தத் தாளத்தைப் போடுவதும் உண்டு. பொதுவாக சாபுதாளம் என்பது மிஸ்ரசாபு தாளத்தினையே குறிக்கும்.
சாபுதாளம் நான்கு வகைப்படும்.
- திஸ்ரசாபு தாளம்
- கண்டசாபு தாளம்
- மிஸ்ரசாபு தாளம்
- சங்கீர்ணசாபு தாளம்
திஸ்ரசாபு தாளம்
தொகு- இது ஆவர்த்தனத்துக்கு (1+2=3) மூன்று எண்ணிக்கைகளையுடையது.
- முதல் தட்டுக்கு ஒரு எண்ணிக்கையும், இரண்டாம் தட்டுக்கு இரண்டு எண்ணிக்கைகளும் ஆகும்.
- சில நாடோடிப் பாடல்களை இத்தாளத்தில் காணலாம்.
- திஸ்ர சாபு தாளத்திற்கான ஜதி தகிட என்பதாகும்.
கண்டசாபு தாளம்
தொகு- இது ஆவர்த்தனத்துக்கு (2+3=5) மூன்று எண்ணிக்கைகளையுடையது.
- முதல் தட்டுக்கு இரண்டு எண்ணிக்கையும், இரண்டாம் தட்டுக்கு மூன்று எண்ணிக்கைகளும் ஆகும்.
- கண்டசாபு தாளத்துக்கான ஜதி தகதகிட என்பதாகும்.
- எடுத்துக்காட்டுக்கள் :
- பரிதானமிச்சிதே (பிலகரி இராகம்)
- குருலேக எடுவண்டி (கௌரிமனோகரி இராகம்)
மிஸ்ரசாபு தாளம்
தொகு- இது ஆவர்த்தனத்துக்கு (3+4=7) மூன்று எண்ணிக்கைகளையுடையது.
- முதல் தட்டுக்கு மூன்று எண்ணிக்கையும், இரண்டாம் தட்டுக்கு நான்கு எண்ணிக்கைகளும் ஆகும்.
- மிஸ்ரசாபு தாளத்துக்கான ஜதி தகிடதகதிமி என்பதாகும்.
- எடுத்துக்காட்டுக்கள் :
சங்கீர்ணசாபு தாளம்
தொகு- இது ஆவர்த்தனத்துக்கு (4+5=9) மூன்று எண்ணிக்கைகளையுடையது.
- முதல் தட்டுக்கு நான்கு எண்ணிக்கையும், இரண்டாம் தட்டுக்கு ஐந்து எண்ணிக்கைகளும் ஆகும்.
- சங்கீர்ண தாளத்துக்கான ஜதி தகதிமிதகதகிட என்பதாகும்.
- அபூர்வமாக சில பல்லவிகளில் இத்தாளம் உபயோகிக்கப்படுகின்றது.