சாப்ரூம்
சாப்ரூம் (Sabroom) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள தெற்கு திரிப்புரா மாவட்டம்|தெற்கு திரிப்புரா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சியாகும். இந்தியாவையும் வங்காளதேசத்தையும் பிரிக்கின்ற பெனி ஆற்றின் கரையில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் வங்காள மொழியின் கிளை மொழியான நோயாகாலி மொழியைப் பேசுகின்றனர்.
சாப்ரூம் Sabroom | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | தெற்கு திரிப்புரா |
ஏற்றம் | 26 m (85 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,766 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
வாகனப் பதிவு | TR-04 |
புவியியல் அமைப்பு
தொகு23.00° வடக்கு 91.73° கிழக்கு[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் சாப்ரூம் நகரம் பரவியுள்ளது.மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 26 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
மக்கள்தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] சாப்ரூம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,766 பேர் ஆகும் இம்மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 82% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 86 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 78 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 11% அளவில் உள்ளனர்.
அரசியல்
தொகுஇந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக சாப்ரூம் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Sabroom[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.