சாமராயபட்டி

இந்தியா, தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமம்

சாமராயபட்டி தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள மடத்துக்குளம் வட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

சாமராயபட்டி
Samarayappatti
கிராமம்
சாமராயபட்டி is located in தமிழ் நாடு
சாமராயபட்டி
சாமராயபட்டி
சாமராயபட்டி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°30′N 77°19′E / 10.500°N 77.317°E / 10.500; 77.317
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்642204[1]
தொலைபேசி குறியீடு04652
அருகில் உள்ள நகரம்உடுமலைப்பேட்டை

முதன்மைத் தொழில்கள் தொகு

இங்குள்ள மக்களுக்கு முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கரும்பு, வாழை, தென்னை போன்றவை முதன்மைப் பயிர்களாக இருக்கின்றன.

அமைவிடம் தொகு

இவ்வூர் மடத்துக்குளத்தில் இருந்து தெற்கே 8 கி.மீ தொலைவிலும் உடுமலையில் இருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து மேற்கே 24 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. புவியியல் ரீதியான அமைவிடம் 10°30'0" வடக்கு 77°19'52" கிழக்கு ஆக உள்ளது.[2]

தபால் நிலையம் தொகு

சாமராயபட்டியில் ஒரு துணை தபால் நிலையம் உள்ளது. இதன் குறியீடு எண் 642204 ஆகும்.[1]

அருகிலுள்ள இடங்கள் தொகு

திருமூர்த்தி அணை, அமராவதி அணை, அமணலிங்கேசுவரர் ஆலயம், தாண்டேசுவரர் ஆலயம், காசி விசுவநாதர் ஆலயம், பழனி முருகன் கோவில் போன்ற புகழ் மிக்க வழிபாட்டு மற்றும் சுற்றுலாத் தலங்கள் இவ்வூரின் அருகில் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "இந்தியாமாப்பியா இணையத்தளம்". India Mapia. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2017.
  2. "Samarayapatti". wikimapia. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமராயபட்டி&oldid=3882264" இலிருந்து மீள்விக்கப்பட்டது