சாமா பாட்

இந்திய செவ்வியல் நடனக் கலைஞர்

குரு ஷாமா பாட் (Shama Bhate, மராத்தி: शमा भाटे) (பிறப்பு: அக்டோபர் 6, 1950) ஷாமா தை என்றும் அழைக்கப்படுபவர், இந்தியாவின் கதக் நடனக் கலைஞர்களில் ஒருவர் ஆவார். இவரது தொழில் வாழ்க்கையானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது உள்ளது, இவர் 4 வயதிலிருந்தே கதக் நடனத்தைக் கற்று நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். மேலும் கதக் ஆசிரியராக இருந்து, இந்தியாவில் பல கதக் நடனக் கலைஞர்களுக்கு நடனப் பயிற்சி அளிக்கிறார். புனேவில் உள்ள இவரது நடன அகாடமியான நட்ரூப்பின் [1] கலை இயக்குநராகவும் உள்ளார் [2]

ஷாமா பாட்
பெங்களூரில் கதக் பட்டறை ஒன்றை நடத்தும் ஷாமா பாட்
பிறப்பு6 அக்டோபர் 1950
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிகதக் நடனக் கலைஞர்
துணைவர்சனத் பாட்
பிள்ளைகள்அங்கத் பாட்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

குரு ஷாமா பாட் பெல்காமில் (இப்போது பெலகாவி) 6 அக்டோபர் 1950 இல் பிறந்தார். இவரது பெற்றொர்களான திருமதி குலாப் பைசா நாயக் மற்றும் ஸ்ரீ கணகதர் ஜி நாயக் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவர் 1974 ஆம் ஆண்டில் குரு ரோகிணி பாட்டேவின் மகனான சனத் பாட்டேவை மணந்தார். இவர்களுக்கு அங்கத் பாட் என்ற ஒரு மகன் உள்ளார்.

பயிற்சி

தொகு

குரு ஷமா பாட் குரு திருமதி ரோகிணி பாட்டின் முதன்மை சீடர் மற்றும் மருமகள் ஆவார். [3] [4] மேலும் இவர் கதக் சாம்ராட் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மற்றும் பண்டிட். மோகன்ராவ் கல்லியன் புர்கர் ஆகியோரிடம் இருந்தும் பயிற்சி பெற்றுள்ளார். மேற்கூறிய குருக்களிடமிருந்தும், சுய கற்றலிலினாலும் பல ஆண்டு கற்றல் அனுபவர்த்தினால் கதக் நடனத்தின் இவர் இவற்றை கலந்தார். இது 'தாளம்' மற்றும் 'லயம்' ஆகியவற்றில் சிறப்பு உள்ளீடுகளைக் கொண்டதாக ஆனது . [5]

குரு ஷாமா பாட் பல ஆண்டுகளாக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுயாதீனமாக ஆடுபவர்களுக்கும், ஆடலைக் கற்பிக்கும் பல தொழில்முறை கதக் நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். புனே பல்கலைக்கழகத்தின் லலித் கலா கேந்திரா, மும்பை பல்கலைக்கழகத்தின் நாலந்தா கல்லூரி, நாக்பூர் பல்கலைக்கழகத்தின் பாரத் கல்லூரி, புனேவில் உள்ள பாரதி வித்யாபீடம் ஆகியவற்றில் மூத்த குருக்களில் ஒருவராகவும் பல பல்கலைக்கழகக் குழுக்களில் உள்ளார். இவரது வழிகாட்டுதலில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர். மேலும் 12 மாணவர்களுக்கு HRDC தேசிய உதவித்தொகை (மூத்த மாணவர்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது. மேலும் CCERT உதவித்தொகை (இளைய மாணவர்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது. [6]

நடன அமைப்பு பணிகள்

தொகு

குரு சாமா பாட்டேவின் நடனப் பணிகள் [7] விரிவானது. [8] இவர் கதக்கின் பாரம்பரிய [9] மற்றும் சமகால வடிவம் என இரண்டிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பாரம்பரிய மற்றும் செவ்வியல் இசைத் தொகுப்புகளாக - டால்ஸ், தரனாஸ், தும்ரிஸ் போன்றவற்றின் தொகுப்பை இவர் உருவாக்கியுள்ளார். தனது சொந்த கண்ணோட்டத்துடன் உருவாக்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டிலிருந்து மிகச் சமீபத்திய தயாரிப்பாக, இந்திய வீரகாவியமான மகாபாரதத்தில் ஈர்க்கப்பட்டு, 7 வெவ்வேறு இந்திய செவ்வியல் மற்றும் நாட்டுப்புற நடன வடிவங்களைக் கொண்டு அந்த நடனக் கலைஞர்களைக்கொண்டு "அதீத் கி பரச்சாயன் - Reflections on the Mahabharata Saga" என்ற நிகழ்ச்சியை உருவாக்கினார். [10] பாடகி லதா மங்கேஷ்கரின் 85 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நாட்ரூப்பைச் சேர்ந்த இவரது மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு நடன அமைப்பு பணியானது, 'பாலா வாகி தேஸ்' என்ற நடன பாலே ஆகும். [11]

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/expanding-the-boundaries-kathak-dancer-shama-bhate-indian-classical-dance-5334543/
  3. Iyengar, Rishi. "A legend remembered". http://archive.indianexpress.com/news/a-legend-remembered/481101/. 
  4. Kothari, Sunil (1989). Kathak, Indian Classical Dance Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170172239.
  5. https://www.thehindu.com/entertainment/dance/shama-bhate-on-her-artistic-journey/article17475803.ece
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5289607667452540483&SectionId=5131376722999570563&SectionName=Features&NewsDate=20150804&NewsTitle=Blending பரணிடப்பட்டது 2017-02-15 at the வந்தவழி இயந்திரம் the traditional with the modern
  9. http://www.newindianexpress.com/cities/hyderabad/Paramaparaas-Ancient-Temple-Dance-Fest-From-Jan-30/2016/01/28/article3248042.ece
  10. http://www.asianage.com/delhi/7-dance-forms-meld-together-retell-mahabharata-430
  11. http://indiatoday.intoday.in/story/sachin-tendulkar-to-felicitate-lata-mangeshkar-on-85th-birthday/1/384014.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமா_பாட்&oldid=3553463" இலிருந்து மீள்விக்கப்பட்டது