சாமின் குறுக்கீட்டுமானி

சாமின் குறுக்கீட்டுமானி (Jamin interferometer) என்பது ஒரு குறுக்கீட்டுமானியின் வகையாகும்.1856 ஆம் ஆண்டில் சூல்சு சாமின் (Jules Jamin) என்ற பிரெஞ்சு இயற்பியற்லாளரால் இது உருவாக்கப்பட்டது. மேக்-சென்டர் (Mach-Zehnder) குறுக்கீட்டுமானியைப் போன்றதாகும்.

சாமின் குறுக்கீட்டுமானி

இவ்வகை குறுக்கீட்டுமானிகள் அதிக தடிமனைக் கொண்ட இரு கண்ணாடிகளைக் கொண்டுள்ளது. ஃபிரெனெல்லின் சமன்பாட்டின் படி கண்ணாடியின் முதற்பரப்பு கற்றைப் பிரிப்பானாக (beam splitter) செயல்படுகிறது.

முதல் கண்ணாடியில் படும் ஒளிக்கதிரானது இரு கற்றைகளாக பிரிக்கப்படுகிறது. இரு கற்றைகளும் ஒன்றுக்கொன்று இணையாக செல்கிறது. அவை இடம்பெயரும் அளவு கண்ணாடியின் தடிமனைப் பொறுத்தது. இரண்டாம் கண்ணாடி இரு கற்றைகளையும் இணைக்கிறது. இறுதியாக கற்றைகள் இணைந்து திரையில் பிம்பத்தை உருவாக்குகிறது.

கட்ட வேறுபாட்டை (phase shift) உருவாக்கும் பொருட்கள் குறுக்கீட்டுமானியின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அவை உருவாக்கும் இடப்பெயர்ச்சி குறுக்கீட்டுப் பட்டை வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டுக் கணக்கிடப்படுகிறது.

வாயுக்களின் ஒளி விலகல் எண், நிறப்பிரிகை ஆகியவற்றைக் காண சாமின் குறுக்கீட்டுமானி பயன்படுகிறது. இதற்காக ஒளிபுகும் அழுத்தக் கலன் அதன் பாதையில் வைக்கப்படுகிறது. அழுத்த வேறுபாட்டால் ஏற்படும் கட்ட வேறுபாட்டையும் கணக்கிட உதவுகிறது.

மேற்கோள்கள் தொகு