சாமியான் போர்

பண்டைய கிரேக்க போர்

சாமியான் போர் (Samian War, கிமு 440-439) என்பது ஏதென்சுக்கும் சமோசுக்கும் இடையிலான பண்டைய கிரேக்க இராணுவ மோதலாகும். சமோஸ் மற்றும் மிலீட்டஸ் இடையேயே பிரினே என்ற நகரத்தை தன்வயப்படுத்திக் கொள்ளும் விசயமாக தகராறு ஏற்பட்டது. இந்த இரண்டு நாடுகளும் டெலியன் கூட்டணியின் உறுப்பினர்கள். மிலீட்டஸ் ஏதென்சின் உதவியை நாடியது, சாமோஸ் பாரசீகத்தின் உதவியை நாடியது. மிலீட்டசுக்கு ஆதரவாக ஏதென்சு இதில் தலையீட்டனர். சாமியன்கள் மிலீட்டஸ் மீதான தாக்குதலை நிறுத்த மறுத்தபோது, ஏதெனியர்கள் சமோசின் சிலவர் ஆட்சி அரசாங்கத்தினரை எளிதாக விரட்டி, நகரத்தில் ஒரு அரண்காவல் செய்யப் படையை நிறுத்தினர். ஆனால் சிலவர் ஆட்சிக் குழுவினர் பாரசீக ஆதரவுடன் விரைவில் திரும்பினர்.

சாமியான் போர்

சமோசின், ஹெரா கோயில், ஒரு போர்வீரனின் சிலை, கிமு 530
நாள் 440–439 BC
இடம் சாமோஸ்
37°45′N 26°50′E / 37.750°N 26.833°E / 37.750; 26.833
ஏதென்ஸ் வெற்றி; சாமியன் சரண்டைந்தது
பிரிவினர்
ஏதென்சு சாமோஸ்
தளபதிகள், தலைவர்கள்
பெரிக்கிள்ஸ் Melissus of Samos
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

இந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு ஒரு பெரிய ஏதெனியன் கடற்படை அனுப்பப்பட்டது. பெரிக்கிள்ஸ் தலைமையில் அறுபது கப்பல்களைக் கொண்ட இந்த கடற்படை துவக்கத்தில் சாமியானை தோற்கடித்து நகரத்தை முற்றுகையிட்டது. ஆனால் பாரசீக கடற்படை தெற்கிலிருந்து நெருங்கி வருவதை அறிந்ததும் பெரிகிள்ஸ் கணிசமாக கடற்படையுடன் முற்றுகையை தளர்த்திக் கொண்டு பின்வாங்கி நின்றார். இரண்டு கடற்படைகள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாததால் பாரசீகர்கள் திரும்பிச் சென்றனர். பெரும்பாலான ஏதெனியன் கடற்படை பின்வாங்கி விட்டதால், சாமியன்கள் எஞ்சியிருந்த முற்றுகையாளர்களை விரட்டி, இரண்டு வாரங்களுக்கு, தங்கள் தீவைச் சுற்றியுள்ள கடலைத் தங்கள் கட்டுப்பட்டில் கொண்டுவந்தனர். இருப்பினும், பெரிக்கிள்ஸ் தலைமையிலான ஏதெனியர்கள் சுமார் இருநூறு கப்பல்களாக தங்கள் கடற்படையின் பலத்தை அதிகரித்துக் கொண்டு திரும்பி, மீண்டும் சமோசை முற்றுகையிட்டனர். ஒன்பது மாதங்களுக்கு முற்றுகை நீடித்தது. இறுதியில் சமோஸ் நகரம் சரணடைந்தது. சரண்டைவதற்கான விதிமுறைகளின் கீழ் சாமியர்கள் தங்கள் மதில்கள் இடித்து தரைமட்டமாக்க, பணயக்கைதிகளை விடுவித்தனர். தங்கள் கடற்படையையும் சரணடையவைத்தனர். மேலும் அடுத்த 26 ஆண்டுகளுக்கு ஏதென்சுக்கு போர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டனர். இந்த நேரத்தில் பிசாண்டியமும், ஏதென்சுக்கு எதிராக தலை தூக்கப்பார்த்தது. ஆனால் சாமோசுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து அடங்கிவட்டனர். தலை தூக்க பார்த்ததற்கு தண்டனையாக டெலியன் கூட்டணிக்கு பிசாண்டியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகை அதிகரிக்கப்பட்டது.

போரின் போது, சாமியன்கள் எசுபார்த்தாவிடம் உதவி கோரினர். எசுபார்த்தன்கள் துவக்கத்தில் இந்த கோரிக்கையை ஏற்க முனைந்தனர். மேலும் அந்த நேரத்தில் ஏதென்சுக்கு எதிரான போரில் பங்கேற்க அவர்களின் கூட்டாளியான கொரிந்தியா விருப்பாததால் இப்போரில் சாமியன்களுக்கு ஆதரவாக வரவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமியான்_போர்&oldid=3414079" இலிருந்து மீள்விக்கப்பட்டது