சாமி முர்மு

சாமி முர்மு (Chami Murmu) (பிறப்பு 1973கள்) இந்தியாவைச் சேர்ந்த இவர் மரங்களை நடுவதற்கு பெயர் பெற்றவர். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டபோது, இவர் 2,500,000 மரக் கன்றுகளை நட்டிருந்தார்.

சாமி முர்மு
பிறப்பு1973கள்
பனஜி, கோவா, இந்தியா
அறியப்படுவது2,500,000 மரக் கன்றுகள் நடுதல்

வாழ்க்கை

தொகு

கோவாவின் பனஜியில் 1973களில் பிறந்த இவர், தற்போது சார்க்கண்டு மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான சராய்கேலா கர்சாவான் மாவட்டத்தில் இராஜ்நகர் பகுதியில் பக்ரைசாய் கிராமத்தில் [1] வசித்து வருகிறார்.[2]

மரக்கன்றுகள் நடுதல்

தொகு

1996களில், இவர் மரக் கன்றுகளை நடத் தொடங்கினார். கடந்த 24 ஆண்டுகளில் இவர் 2.5 இலட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளார்.[2] இந்த மரங்கள் இவரது கிராமத்தைச் சுற்றியுள்ள மரங்களை " மர மாவோயிஸ்ட்"களால் சட்டவிரோதமாக வெட்டபட்ட இடத்தில் நடப்பட்டுள்ளது. நக்சலைட்டுகளுடனான தொல்லைகள் இருந்தபோதிலும் இவர் தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில், 'சஹயோகி மஹிலா பக்ரைசாய்' என்ற அமைப்பின் செயலாளராக இருந்தார். அதில் 3,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

விருது

தொகு
 
2020 அனைத்துலக பெண்கள் நாள் அன்று நாரி சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி

மார்ச் 2020 அனைத்துலக பெண்கள் நாள் அன்று புதுதில்லியில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவர் உட்பட பன்னிரண்டு பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை வழங்கினார்.[3] அந்த மாதத்தின் பிற்பகுதியில், தானும், சார்கண்டுவின் சுற்றுசூழல் ஆர்வலுமான ஜமுனா துடுவும் சார்கண்டுவின் வனப் பாதுகாப்புப் படைகளில் சேரப்போவதாக இவர் அறிவித்தார். இவர்கள் பத்திரிகைகளில் "லேடி டார்சான்கள்" என்று அழைக்கப்பட்டனர். ஜமுனா துடு தனது அமைப்பில் 300 உறுப்பினர்களைக் கொண்டுள்ளார். இவர்கள் இணைந்து பணியாற்றுவதால் கூடுதல் வெற்றியை அடைய முடியும் என்று நம்புகிறார்கள்.[1]

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Green warriors to join forces". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  2. 2.0 2.1 Engl, India New; News (2020-03-09). "Chami Murmu: Jharkhand's green warrior among Nari Shakti awardees". INDIA New England News (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10. {{cite web}}: |last2= has generic name (help)
  3. "President Kovind presents the Nari Shakti Puraskar on International Women's Day in New Delhi". YouTube. 8 March 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_முர்மு&oldid=3931212" இலிருந்து மீள்விக்கப்பட்டது