முதன்மை பட்டியைத் திறக்கவும்

சாம்பசி ஆறு ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய ஆறு. இதுவே ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் பெரிய ஆறும் ஆகும். இதன் வடிநிலத்தின் பரப்பு 1,390,000 சதுர கிலோமீட்டர்கள். இதன் நீளம் 3,540 கி.மீ. சாம்பியாவில் தொடங்கும் இந்த ஆறு அங்கோலா, நமீபியா, போத்சுவானா, சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாடுகளைத் தொட்டு பின்னர் இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது.

சாம்பசி (Zambezi)
சாம்பசி (Zambesi)
ஆறு
Zambezi River at junction of Namibia, Zambia, Zimbabwe & Botswana.jpg
நமிபியா, சாம்பியா, சிம்பாப்வே, போத்சுவானா நாடுகள் இணைந்திருக்கும் இடத்தில் சாம்பசி ஆறு
நாடுகள் சாம்பியா, காங்கோ, அங்கோலா, நமீபியா, போத்சுவானா, சிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி, தான்சானியா
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் Mwinilunga, சாம்பியா
 - உயர்வு 1,500 மீ (4,921 அடி)
கழிமுகம் இந்தியப் பெருங்கடல்
நீளம் 2,574 கிமீ (1,599 மைல்)
வடிநிலம் 13,90,000 கிமீ² (5,36,682 ச.மைல்) [1][2]
Discharge
 - சராசரி [1][2]
சாம்பசி ஆறும் அதன் படுகையும்
சாம்பசி ஆறும் அதன் படுகையும்

இந்த ஆற்றின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலம் விக்டோரியா அருவி. சவுமா அருவி, இங்கோனை அருவி ஆகியன மற்ற முக்கிய அருவிகள். இவ் ஆற்றில் இரண்டு பெரிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை: கரிபா அணை (இது சாம்பியா, சிம்பாப்வே நாடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது), ககோரா பாசா அணை (இது மொசாம்பிக், தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது). மேலும் விக்டோரியா அருவியிலும் சிறிய நீர்மின் நிலையம் ஒன்றுள்ளது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பசி_ஆறு&oldid=1362748" இருந்து மீள்விக்கப்பட்டது