சாம்பல் ரீபாக்

ஒரு பாலூட்டி இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pelea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

சாம்பல் ரீபாக் (grey rhebok or gray rhebuck), ஆப்பிரிக்காவில் உள்நாட்டில் ரீபாக் என்று அழைக்கப்படுவது ஒரு மறிமான் இனமாகும். இது தென்னாப்பிரிக்கா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளை பூர்வாகமாக கொண்ட ஒரு மறிமான் இனமாகும். இதன் விலங்கியல் பெயில் உள்ள கேப்ரியோலஸ் என்ற சொல் லத்தீன் மொழியில் 'சிறிய ஆடு' என்று பொருளாகும்.

தெற்கு சாம்பல் ரீபாக்
Southern Grey Rhebok
தென்னாப்பிரிக்காவின் வெஸ்டர்ன் கேப், போன்டெபோக் தேசிய பூங்காவில் ஒரு ஆண் மான்.
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pelea
இனம்:
இருசொற் பெயரீடு
Pelea capreolus
(Forster, 1790)

விளக்கம் தொகு

 
சான் டியேகோ உயிரியல் பூங்காவில் ஒரு பெண் மான்
 
ஆண் சாம்பல் ரீபாக் உலவுகிறது

சாம்பல் ரீபாக் என்பது 19-30 கிலோ எடையுள்ள நடுத்தர அளவிலான மறிமான் ஆகும். இது நீண்ட கழுத்தையும், குறுகிய காதுகளையும் கொண்டது. இதன் உரோமம் குறுகியதாகவும், அடர்த்தியாகவும், பல்வேறு சாம்பல் நிற திட்டுக்களாக வண்ணம் கொண்டது. ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் உண்டு. கொம்புகள் நேராகவும், கூர்மையாகவும், அடிப்பகுதியில் வளையங்களைக் கொண்டும், சுமார் 15-25 செமீ (6-10 அங்குலம்) நீளமானதாகவும் இருக்கும்

பரவலும், வாழ்விடமும் தொகு

இவை தெற்கு ஆப்பிரிக்காவின் உயரமான பகுதிகளில் மட்டுமே பொதுவாக புல்வெளி, மலை வாழ்விடங்களில் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, சோர்வெல்ட் போன்ற பகுதிகளில் பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ உயரத்தில் வாழ்கின்றன. இவை தங்கள் உடலை குளிர்ச்சியிலிருந்து காப்பதற்காக சாம்பள் நிற கம்பளி முடிகளைக் கொண்டுள்ளன. கேப்பின் கடலோரப் பகுதியில், கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் காணப்படுவதால், இவை அந்த வாழ்விடத்திற்கு உரியவையாக வரையறுக்கப்படவில்லை.[2]

இனப்பெருக்கமும், நடத்தையும் தொகு

சாம்பல் ரீபாக் மான்கள் தங்கள் பிராந்தியத்தின் எல்லையை சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் ஆகியவற்றின் மூலம் வறையைறைக்கின்றன. நிமிர்ந்த தோரணையில் நிற்பது அல்லது நடப்பது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றின் மூலம் அதன் பிரதேசத்தை பராமரிக்கிறன. இனப்பெருக்க காலத்தில் ஆண் மான்கள் மிகவும் ஆக்ரோசமாக மாறுகின்றன. சாம்பல் ரீபாக் மான்கள் பொதுவாக ஒரு ஆண் மானின் தலைமையில் 15 பெண் மான்கள் மற்றும் குட்டிகளைக் கொண்ட மந்தையாக உள்ளது. எனவே இந்த இனத்தின் ஆண் மான் பலமனைவிகளைக் கொண்டதாக உள்ளது . சாம்பல் ராபாக் மான்கள் பருவகாலங்களில் இனப்பெருக்கம் செய்யும் [2] இனச்சேர்க்கை சனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் நடைபெறுகிறது. பெண் மான்கள் சுமார் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்து, வசந்த காலத்தின் பிற்பகுதியிலும் கோடைகாலத்திலும் ( தெற்கு அரைக்கோளத்தில் நவம்பர் முதல் சனவரி வரை) ஒரு கன்றை ஈனும்.

இந்த இனம் தான் உண்ணும் உணவில் இருந்தே தனக்கு தேவையான நீர் சத்தைப் பெறுகிறது. எனவே இவை நீர் நிலைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள உணவு ஆதாரங்களையும் பயன்படுத்த இயலும்.

பாதுகாப்பு நிலை தொகு

சாம்பல் ரீபாக் அச்சுறு நிலையை அண்மித்தத்த நிலையில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது 2,000 என்றும், பாதுகாப்பற்ற பகுதிகளில் 18,000 என்று இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனங்கள் வாழும் பகுதியில் விரிவாக கணக்கெடுக்கப்படாதது அல்லது மதிப்பீடுகள் கிடைக்காத காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளது.

சமகால கலாச்சாரத்தில் தொகு

ரீபாக் என்ற இந்த மான் இனத்தின் ஆஃப்ரிகான்ஸ் மொழி பெயரை பிரித்தானிய-அமெரிக்க விளையாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனமான ரீபொக்குக்கு இடப்பட்டது.[3] 1958 ஆம் ஆண்டில், ரீபொக் நிறுவனர் ஜோசப் வில்லியம் ஃபாஸ்டர் US Webster's New School and Office Dictionary இல் இந்தப் பெயரைக் கண்டறிந்தார்.[4]

குறிப்புகள் தொகு

  1. Taylor, A., Cowell, C. & Drouilly, M. 2017. Pelea capreolus. The IUCN Red List of Threatened Species 2017: e.T16484A50192715. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-2.RLTS.T16484A50192715.en.
  2. 2.0 2.1 . 
  3. "Reebok". Sneakers: brands. 2008-05-07. Archived from the original on 2008-05-07.
  4. Dirvanauskas, Gabriele (2021-09-23). "Bolton's wanderer: Reebok founder Joe Foster looks back". Drapers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_ரீபாக்&oldid=3924953" இலிருந்து மீள்விக்கப்பட்டது