சாயாஜி ரத்னா விருது
சாயாஜி ரத்னா விருது (Sayaji Ratna Award) என்பது பரோடா மேலாண்மை சங்கத்தினால் 2013-ல் தேசிய அளவிலான விருது சிறந்த பங்களிப்பினை வழங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் விருதாகும்.
சாயாஜி ரத்னா விருது Sayaji Ratna Award | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | வணிகம், விளையாட்டு, கலை, மனிதநேயம், கல்வி, ஆட்சி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பு |
தேதி | 2013 |
இடம் | வடோதரா |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பரோடா மேலாண்மை சங்கம் |
இணையதளம் | BMABaroda.com |
பின்னணி
தொகுசாயாஜி ரத்னா விருதினை வடோதராவின் முன்னாள் ஆட்சியாளரான மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III-இன் அவரது 151வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பரோடா மேலாண்மை சங்கம் 2013-்நிறுவியது.[1] பரோடா மேலாண்மை சங்கம் என்பது வதோதராவில் 1957-ல் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அனைத்திந்திய மேலாண்மை சங்கத்தின் அமைப்பில் உறுப்பினராக உள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் இந்தியாவில் வாழும் ஜாம்பவான்களுக்கு வழங்கப்படுகிறது.[2] இது வணிகம், விளையாட்டு, கலை, மனித நேயம், கல்வி, நிர்வாகம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் ஆளுமை மற்றும் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.[3] மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் தனது புகழ்பெற்ற ஆட்சியின் போது வெளிப்படுத்திய நட்சத்திர குணங்களைக் கொண்ட ஒரு நபரை நடுவர் குழு தேர்ந்தெடுக்கிறது. இந்த குணங்களில் குறிப்பிடத்தக்கவை - தொலைநோக்கு பார்வை, நேர்மை, இரக்கம், பரோபகாரம், நிறுவனத்தை உருவாக்கும் திறன், நிபுணர்களின் ஆதரவு மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கி ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் தலைமை ஆகியன.
முதல் விருதாளர்
தொகுஇந்த விருதை முதலில் பெற்றவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நா. ரா. நாராயண மூர்த்தி ஆவார். 13 மே 2013 அன்று வதோதராவில் நடந்த விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.[4]
இரண்டாவது விருதாளர்
தொகுசாயாஜி ரத்னா விருதை இரண்டாவதாகப் பெற்றவர் ரத்தன் டாட்டா, மும்பையைச் சேர்ந்த டாட்டா குழுமத்தின் இந்தியத் தொழிலதிபர் ஆவார். தற்போது இவர் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் சீர்மிகு தலைவர் பதவியை வகிக்கிறார். இது ஒரு கெளரவ மற்றும் ஆலோசனை பதவியாகும். இந்த விருது 1 திசம்பர் 2015 அன்று வதோதராவில் இவருக்கு வழங்கப்பட்டது.[5][6][7]
மூன்றாவது விருதாளர்
தொகுஇந்த விருதை மூன்றாவதாகப் பெற்றவர் இந்தி திரைத்துறை நடிகர் அமிதாப் பச்சன் ஆவார். இது இவருக்கு 20 நவம்பர் 2018 அன்று வதோதராவில் வழங்கப்பட்டது.[8]
மேலும் பார்க்கவும்
தொகு- ↑ BMA starts Sayaji Ratna Award, The Times of India, 11-Mar-2013
- ↑ Award instituted to commemorate Gaekwad III’s 151st birth anniversary, The Indian Express, 10-May-2013
- ↑ First Sayaji Ratna Award to Murthy, India Speaker Bureau[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Narayanamurthy is the first Sayaji Ratna, The Indian Express, 14-May-2013
- ↑ BMA to confer Sayaji Ratna Award on Ratan Tata, The Times of India, 6-Apr-2014
- ↑ Sayaji Ratna Award to Ratan Tata, The Times of India, 20-Aug-2015
- ↑ Ratan Tata is conferred with Sayaji Ratna, Indian Express, 2-Dec-2015
- ↑ Amitabh Bachchan to be given SRA