சாயாஜி ராவ் கெய்க்வாட் III

சாயாஜிராவ் கெய்க்வாட் III (Sayajirao Gaekwad III) (பிறப்புப் பெயர்:கோபால்ராவ் கெய்க்வாட்); 11 மார்ச் 1863 – 6 பிப்ரவரி 1939) பிரித்தானிய இந்தியாவின் துணைப்படைத் திட்டத்தை ஏறறுக்கொண்டிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான, தற்கால குஜராத் மாநிலத்தின் பெரும்பகுதிகளை ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜாவாக 1875 முதல் 1939 முடிய 64 ஆண்டுகள் இருந்தவர்.

சாயாஜி ராவ் கெய்க்வாட் III
மகாராஜா
Sayajirao Gaekwad III, Maharaja of Baroda, 1919.jpg
ஆட்சி10 ஏப்ரல் 1875 - 6 பிப்ரவரி 1939
முடிசூட்டு விழா10 ஏப்ரல் 1875
முன்னிருந்தவர்மல்கர் ராவ் கெய்க்வாட்
பின்வந்தவர்பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட்
அரசிதஞ்சாவூரின் சிம்னாபாய்
வாரிசு(கள்)பஜுபாய்
புத்லாபாய்
பதே சிங்
ஜெய்சிங் ராவ்
சிவாஜி ராவ்
இந்திரா தேவி
தைரியசீல ராவ்
அரச குலம்கெயிக்வாட் வம்சம்
தந்தைகாசிராவ் கெய்க்வாட்
பிறப்புமார்ச்சு 11, 1863(1863-03-11)
இறப்பு6 பெப்ரவரி 1939(1939-02-06) (அகவை 75)[1]
அடக்கம்பரோடா
சமயம்இந்து சமயம்


ராஜா ரவி வர்மா வரைந்த மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III ஓவியம்

இவரது காலத்தில் பரோடோ இராச்சியத்தின் பொருளாதாரம், கல்வி, தொடருந்து போக்குவரத்து, பரோடா வங்கி போன்ற உள்கட்டமைப்புகள் பெருகியது. இவரது இராச்சியத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழித்தவர்.மேலும் துவக்கப் பள்ளிக் கல்வியை கட்டயமாக்கியவர். இவர் மராத்திய கூட்டமைப்பின் ஒன்றான கெயிக்வாட் வம்சத்தைச் சேர்ந்தவர்.

மேலும் இவர் ராஜா ரவி வர்மாவை ஆதரித்தவர். இராஜ ரவி வர்மாவின் வரைந்த அனைத்து ஓவியங்களின் காப்புரிமை இவரிடம் உள்ளது.

படக்காட்சிகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sayajirao Gaekwad III
என்பதின் ஊடகங்கள் உள்ளன.