சாய் இங்-வென்

சாய் இங்-வென் (Tsai Ing-wen, சீனம்: 蔡英文; பிறப்பு: 31 ஆகத்து 1956) சீனக் குடியரசின் அரசியல்வாதி ஆவர். இவர் சீனக் குடியரசின் (தாய்வான்) முதலாவது பெண் அதிபராக 2016 சனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் சனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

சாய் இங்-வென்
Tsai Ing-wen

蔡英文
蔡英文官方元首肖像照.png
சீனக் குடியரசின் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 மே 2016
Premier லாய் சிங்-டே
துணை குடியரசுத் தலைவர் சென் சியென்-யென் (தெரிவு)
முன்னவர் மா யிங்-ஜோ
சனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 மே 2014
முன்னவர் சூ செங்-சாங்
பதவியில்
20 மே 2008 – 14 சனவரி 2012
முன்னவர் பிராங்க் சே (பதில்)
பின்வந்தவர் சென் சூ (பதில்)
சீனக் குடியரசின் துணைப் பிரதமர்
பதவியில்
25 சனவரி 2006 – 21 மே 2007
Premier சூ செங்-சாங்
முன்னவர் வூ-ரொங்-இ
பின்வந்தவர் சோ இ-ஜென்
தனிநபர் தகவல்
பிறப்பு 31 ஆகத்து 1956 (1956-08-31) (அகவை 66)
தாய்பெய், சீனக் குடியரசு
அரசியல் கட்சி சனநாயக முன்னேற்றக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் தேசிய தாய்வான் பல்கலைக்க்ழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளியல் பள்ளி

தைவானிலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் படித்த இவர், தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும், கோர்னெல் பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், இலண்டன் பொருளியல் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார்.[2][3]

2000 ஆம் ஆண்டில் சென் சூயி-பியான் அரசுத்தலைவராகப் பதவியேற்ற போது சாய் அவரது அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் சனநாயக முன்னேற்றக் கட்சியின் உறுப்பினரானார். பின்னர் நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டு, துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டில் பிரதமர் சூ செங் சான் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்ட போது இவரும் பதவி இழந்தார். 2008 ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் கட்சி தோற்றதை அடுத்து, இவர் சனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்றார். அதனை அடுத்து கட்சித் தலைமைப் பதவியைத் துறந்தார். 2016 அரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புக்கள்தொகு

  1. 1.0 1.1 "Tsai Ing-wen elected Taiwan's first female president". பிபிசி. 17 January 2016. http://www.bbc.com/news/world-asia-35333647. 
  2. "Tsai Ing-wen (蔡英文)|Who's Who|WantChinaTimes.com". Wantchinatimes.com. 1956-08-31. 2012-02-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. Ing-Wen Tsai PhD. "Ing-Wen Tsai: Executive Profile & Biography - BusinessWeek". Investing.businessweek.com. 2012-02-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_இங்-வென்&oldid=3631688" இருந்து மீள்விக்கப்பட்டது