சாரணபாசுகரன்
சாரணபாசுகரன் (1923 ஏப்ரல் 20 – 1986 நவம்பர் 25) (Saaranabashkaran) என்னும் டி. எம். எம். அகமது (T. M. M. Ahamed) கவிஞர்; இதழாளர். லைலா - மசுனு காதல் கதையை யூசுப் - சூலைகா என்னும் பெயரில் படைத்தவர்.
சாரணபாசுகரன் | |
---|---|
கவிஞர்திலகம் | |
பிறப்பு | டி. எம். எம். அகமது 1923 ஏப்ரல் 20 கூத்தாநல்லூர், தஞ்சை மாவட்டம் |
இறப்பு | 1986 நவம்பர் 25 |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | அமரன் ரஹ்மத் இப்னு ரஹ்மத்துல்லாஹ், |
அறியப்படுவது | யூசுப் சுலைகா காவியம் |
பட்டம் | கவிஞர் திலகம் |
சமயம் | முசுலீம் |
பிறப்பு
தொகுசாரணபாசுகரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் பிறந்தார்.
கல்வி
தொகுஇல்லற வாழ்க்கை
தொகுபணிக்கள வாழ்க்கை
தொகுசாரணபாசுகரன் 1945ஆம் ஆண்டில் காரைக்காலில் இருந்து வெளிவந்த பால்யன் என்னும் கிழமை இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மலேயாவின் ஒரு பகுதியான பினாங்கில் இருந்து வெளிவந்த தேசநேசன் என்னும் நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1949 ஆம் ஆண்டில் மலேயாவில் இருந்து வெளிவந்த களஞ்சியம் என்னும் நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957அம் ஆண்டில் திருச்சியில் இருந்து வெளிவந்த சன்மார்க்க சங்கு என்னும் திங்களிருமுறை இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
எழுத்துப்பணி
தொகுடி. எம். எம். அகமது என்னும் தனது இயற்பெயரில் சாரணபாசுகரன் எழுதிய ஜினானா ஜெயந்தி கீதம் என்னும் பாடல் 1936 ஆம் ஆண்டில் இதழொன்றில் வெளிவந்தது. இவருக்கு சாரணபாசுகரன் என்னும் புனைப்பெயரை 1937 ஆம் ஆண்டில் ந. மு. வேங்கடசாமி நாட்டார் சூட்டினார். அதன் பின்னர் சாரணபாசுகரன், அமரன், ரஹ்மத், இப்னு ரஹ்மத்துல்லாஹ் ஆகிய புனைப்பெயர்களில் டி. எம். எம். அகமது தனது படைப்புகளை வெளியிட்டார். அவற்றுள் சிலவற்றை பின்வரும் நூல்களாக வெளியிட்டார்:
வ.எண் | ஆண்டு | நூல் | வகை | பதிப்பகம் | குறிப்பு |
01 | 1946 | மணியோசை | கவிதை | ? | |
02 | 1947 | சாபம் | கவிதை | ? | |
03 | 1951 | சங்கநாதம் | கவிதை | ? | |
04 | 1951 | இதயக் குமுறல் | கவிதை | ? | |
05 | 1956 | யூசுப் – சூலைகா | காவியம் | ? | |
06 | 1959 | மணிச்சரம் | கவிதை | ? | |
07 | 1961 | நாடும் நாமும் | கவிதை | ? | |
08 | 1977 | சாரணபாசுகரனின் கவிதைகள் | கவிதைகள் | ? |
1950 ஆம் ஆண்டில் முசுலீம் முரசு என்னும் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்று முதற்பரிசு பெற்றார்.
வானொலிப் படைப்புகள்
தொகுகவியரங்கம்
தொகுதிருச்சி வானொலி நிலையம் லெ. ப. கரு. ராமநாதன் தலைமையில் வாழ்க்கை வளமுற என்னும் பொதுத் தலைப்பில் நடத்திய கவியரங்கில் உணர்வு என்னும் துணைத்தலைப்பில் சாரணபாசுகரன் கவிதை படித்தார்.
1960 சனவரி 14 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்த பொங்கல் கவியரங்கில் நாடு நகரம் என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.
1963 சனவரி 13 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம், சீனா ஆக்கிரமிப்பை எதிர்த்து, வீறுகொண்ட பாரதம் என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்த கவியரங்கில் சுவாமி சித்பவானந்தர் தலைமையில் தியாகம் என்னும் துணைத்தலைப்பில் கவிதை படித்தார்.
1968 சனவரி 8 ஆம் நாள் சென்னையில் கூடிய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கில் வணிகன் என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.
1968 சனவரி 14 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம் அன்றைய உள்ளாட்சி அமைச்சர் பாவலர் முத்துச்சாமி தலைமையில் ஏற்பாடு செய்த கவியரங்கில் பால் என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.
வானொலி நாடகம்
தொகுஈராக்கிய மன்னர் காரூன் முதலான் எழுவரை நாடகமாந்தர்களாகக் கொண்டு சாரணபாசுகரன் எழுதிய பிரிவை மாற்றிய பிரிவு என்னும் நாடகத்தை 1971 ஏப்ரல் 16 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம் நாடகவிழாவை முன்னிட்டு ஒலிபரப்பியது.
சொற்பொழிவு
தொகுவரம்பு கடந்த வாழ்வில் அன்பு என்னும் தலைப்பில் 1971 அக்டோபர் 13 ஆம் நாளில் திருச்சி வானொலியில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.
விருதுகள்
தொகுதிருச்சி ஜமால் முகம்மது கல்லூரில் நடைபெற்ற முதல் இசுலாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் சாரணபாசுகரனின் தமிழ்ப்பணி பாராட்டப்பட்டது.
1986 நவம்பர் 25 ஆம் நாளில் சாரணபாசுகரனுக்கு கவிஞர் திலகம் எனும் பட்டம் வழங்கப்பட்டது.
மறைவு
தொகுசாரணபாசுகரன் 1986 நவம்பர் 25ஆம் நாள் மரணம் அடைந்தார்.