சாரா ஜேக்கப் (பத்திரிகையாளர்)
சாரா ஜேக்கப் (Sarah Jacob) இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் தொகுப்பாளரும் ஆவார். சாரா ' வி தி பீப்பிள் ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இது முன்பு பர்கா தத் என்பவர் தொகுத்து வழங்கிய என்.டி.டி.வி.யின் முதன்மை நிகழ்ச்சியாகும். [1] [2] ஒரு நிருபராக இவர் அமெரிக்காவின் இரண்டு அதிபர் தேர்தல்களையும் உள்ளடக்கியுள்ளார். மேலும் 'இந்தியாவின் கடற்கரையைச் காப்பாற்று' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் முழு கடற்கரையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நான்கு ஆண்டுகளாக இவர் தி எகனாமிக் டைம்ஸில் பணிபுரிந்தார் மற்றும் 2011 இல் தி எகனாமிக் டைம்ஸின் சிறந்த இளம் பத்திரிகையாளராக அறிவிக்கப்பட்டார். [3] மும்பை புனித சேவியர் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பு மற்றும் ஆவண இதழில் முதுகலை பட்டமும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆசியா ஃபெலோ (டோவ் ஜோன்ஸ் அறக்கட்டளை) ஆக முடித்தார் .
சாரா ஜேக்கப் | |
---|---|
மீடியா ரம்பிள் 2019 இல் சாரா ஜேக்கப். |
குறிப்புகள்
தொகு- ↑ Team, S. T. P. (2017-01-22). "Sarah Jacob to host We The People as Barkha Dutt quits NDTV". SheThePeople.TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
- ↑ "Sarah Jacob - The Media Rumble". Newslaundry (in ஆங்கிலம்). 2013-09-17. Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
- ↑ "Class of 2014 - Sarah Jacob". NYU Journalism (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.