சாரிடிமைட்ஸ்

கிமு 5 ஆம் நூற்றாண்டின் ஏதெனியன் கடற்படை அதிகாரி

சாரிடிமைட்ஸ், (Charitimides, பண்டைக் கிரேக்கம்Χαριτιμίδης ) (இறப்பு: கிமு 455 ) என்பவர் கிமு 5 ஆம் நூற்றாண்டின் ஏதெனியன் கடற்படை அதிகாரி ஆவார். கிரேக்க நகர அரசுகள் ஏதெனியன் தலைமையில் ஒன்று சேர்ந்த டெலியன் கூட்டணிக்கும் பாரசீகப் பேரரசிற்கும் இடையே நடந்த தொடர்ச்சியான மோதலான டெலியன் கூட்டணியின் போர்களின் காலத்தில் கடற்போர்களில் கலந்துகொண்டார். பாரசீக ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி லிபிய ஆட்சியாளரான இரண்டாம் இனரோசு போராடினார். அவருக்கு ஆதரவாக கிமு 460 இல் சென்ற டெலியன் கூட்டணியின் கடற்படைக்கு தளபதியாக எகிப்துக்கு இவர் அனுப்பப்பட்டார் (சில ஆசிரியர்கள் கூற்றின்படி 40 கப்பல்கள் என்றும், வேறு சிலரின் கூற்றின்படி 200 கப்பல்கள் கொண்ட படை). இவரது கடற்படை சைப்ரஸ் கடற்கரையில் இயங்கி வந்த நிலையில், அங்கிருந்து இவர் எகிப்துக்குத் செல்லுமாறு அனுப்பப்பட்டார்.

சாரிடிமைட்ஸ் கடற்படை ஆரம்பத்தில் சிமோன் தலைமையிலான சைப்ரஸ் பயணத்தில் கலந்து கொண்டது.
டெலியன் கூட்டணியின் எகிப்திய போர்த் தொடர்களின் முக்கிய நடவடிக்கைகளில் சாரிடிமைட்ஸ் பங்கேற்றார்.

நைல் ஆற்றில் அகாமனிசியருக்கு எதிராக தனது கடற்படையை சாரிடிமைட்ஸ் வழிநடத்தினார். மேலும் 50 போனீசியக் கப்பல்களைக் கொண்ட கடற்படையைத் தோற்கடித்தார். [1] [2] இது கிரேக்கர்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையிலான கடைசி கடற்படை மோதலாகும். [2] [3] 50 போனீசியன் கப்பல்களில், இவர் 30 ஐ அழித்து, மீதமுள்ள 20 கப்பல்களைக் கைப்பற்றினார். [3]

பாரசீக தளபதி மெகாபிச்சிஸ் தன் கீழான பெரிய படையுடன் பாரசீகம் திரும்பியபோது, எஞ்சியிருந்த பாரசீகப் படைகள் முற்றுகையிடப்பட்டிருந்த மெம்பிசின் முற்றுகையை இவர்கள் அகற்றினர். பின்னர் கிமு 455 இல் பிரோசோபிடிசு முற்றுகையில் எகிப்த்தியர்களையும் அவர்களது கிரேக்க கூட்டாளிகளையும் முற்றுகையிட்டார் . [4] பிரோசோபிடிசில் பாரசீகர்களுக்கு எதிரான போரில் சாரிடிமைட்ஸ் அவர்களை அழிந்தார். [3]

எகிப்தியர்களுக்காகப் போரிட்ட மற்ற புகழ்பெற்ற கிரேக்க தளபதிகள் சாப்ரியாஸ் மற்றும் அஜிசிலேயஸ் ஆகியோராவர். [5]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரிடிமைட்ஸ்&oldid=3456781" இலிருந்து மீள்விக்கப்பட்டது