சாருலதா முகர்ஜி

இந்தியச் சமூக ஆர்வலர்

சாருலதா முகர்ஜி (Charulata Mukherjee) பிரம்ம சமாஜம், அகில இந்திய மகளிர் மாநாட்டோடு தொடர்புடைய மகளிர் உரிமை ஆர்வலரும், கொல்கத்தாவைச் சேர்ந்த சமூக சேவகரும் ஆவார்.[1] [2] [3] இவர் தனது சமூக மற்றும் பெண்கள் உரிமைச் செயல்பாடுகளுக்காகப் புகழ்பெற்றார். இவர் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தீவிர உறுப்பினராக இருந்தார். மேலும், அம்ரித் கவுர், ராணி ராஜ்வாடே, முத்துலட்சுமி ரெட்டி, அன்சா மேத்தா போன்ற பிற சமகாலத்தவர்களுடன் பணியாற்றினார். [4] [5]

தனது மகள் ரேணுகா ராய், கூச் பெகரின் மகாராணி சுனிதி தேவி, மயூர்பஞ்சு மகாராணி சுசரு தேவி, டி.ஆர். நெல்லி போன்ற வங்காளத்தைச் சேர்ந்த மற்ற பெண் ஆர்வலர்களுடன் 1932 முதல் அனைத்து வங்காள பெண்கள் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். இவர்கள் தேவதாசி முறையை ஒழித்தல், பால்வினைத் தொழில், பாலினத் தொழிலாகளின் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக போராடினர். [6]

இவர் முனைவர் பி. கே. ராய் - வங்காளக் கல்வியாளர் சரளா ராய் ஆகியோரின் மகள். அரவிந்தருடன் சேர்ந்து இந்தியாவில் தேசிய கல்வி முறையை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த சதீஷ் சந்திர முகர்ஜி என்பவரை மணந்தார். சுப்ரத்தோ முகர்ஜி, பிரசண்தோ முகர்ஜி என்ற ஒரு மகன்களும், ரேணுகா ராய் என்ற ஒரு மகளும் உள்ளனர்.

சான்றுகள் தொகு

  1. Basu, Aparna (2001). G.L. Mehta, a Many Splendoured Man By Aparna Basu. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170228912. https://books.google.com/?id=0P9ahUa7wrgC&pg=PA87&dq=charulata+Mukherjee#v=onepage&q=charulata%20Mukherjee&f=false. 
  2. Minault, Gail (1989). The extended family: women and political participation in India and Pakistan. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170010548. https://books.google.com/?id=uF8iAQAAMAAJ&q=charulata+Mukherjee&dq=charulata+Mukherjee. 
  3. Grover, Verinder (1993). Great Women of Modern India: Sarojini Naidu by Verinder Grover, Ranjana Arora. பக். 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171004577. https://books.google.com/?id=djcqAAAAYAAJ&q=charulata+Mukherjee&dq=charulata+Mukherjee. 
  4. Woman with a mission, Rajkumari Amrit Kaur: a centenary volume. 1989. பக். 28. https://books.google.com/?id=-r1xAAAAMAAJ&q=charulata+Mukherjee&dq=charulata+Mukherjee. 
  5. Taneja, Anup (2005). Gandhi, Women, and the National Movement, 1920-47 By Anup Taneja. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788124110768. https://books.google.com/?id=yLcAVn-yXlMC&pg=PA38&dq=charulata+Mukherjee#v=onepage&q=charulata%20Mukherjee&f=false. 
  6. Mandal, Jyotirmay (2003). Women and Reservation in India By Jyotirmay Mandal. பக். 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178351452. https://books.google.com/?id=PnFptNvOTDcC&pg=PA214&dq=charulata+Mukherjee#v=onepage&q=charulata%20Mukherjee&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா_முகர்ஜி&oldid=3295007" இலிருந்து மீள்விக்கப்பட்டது