சார்லசு பாப்ரி

சார்லசு பாப்ரி (Maurice Paul Auguste Charles Fabry; 11 சூன் 1867 – 11 டிசம்பர் 1945)[1][2] என்பவர் ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார்.[3][4]

மோரிசு பவுல் ஆகுஸ்ட் சார்லசு பாப்ரி
Maurice Paul Auguste Charles Fabry
பிறப்பு(1867-06-11)சூன் 11, 1867
மர்சேய்
இறப்புதிசம்பர் 11, 1945(1945-12-11) (அகவை 78)
பாரிஸ்
அறியப்படுவதுபாப்ரி–பெரோ தலையீட்டுமானி
விருதுகள்ஜான்சன் பதக்கம் (1916)
ரம்போர்டு பதக்கம் (1918)
பிராங்கிளின் பதக்கம் (1921)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சார்லெஸ் ஃபாப்ரி, பாரிசில் உள்ள ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒளியியல் மற்றும் நிறப்பிரிகைத் துறையில் அவரை ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திய, அவருடைய, குறுக்கிடும் விளிம்புகள் பணிக்காக 1892 ஆம் ஆண்டு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1904 ஆம் ஆண்டு மார்ஸைல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 26 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.

ஒளியியலில் குறுக்கிடும் விளிம்புகள் எனும் நிகழ்விற்கு விளக்கத்தைக் கண்டறிந்தார். 1899 ஆம் ஆண்டு, தன் சக பணியாளர் ஆல்பிரட் பெரோ என்பாருடன் இணைந்து பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்தார்.[5][6][7] என்றி புவசோனுடன் இணைந்து ஓசோன் படலத்தை 1913 இல் கண்டுபிடித்தார்.

1921 ஆம் ஆண்டு, பாப்ரி பொது இயற்பியல் பேராசிரியராக சோர்போனில் நியமிக்கப்பட்டார். புதிய ஒளியியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். 1926 ஆம் ஆண்டு ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பேராசிரியரானார். 1929 ஆம் ஆண்டு, பிரெஞ்சு வானியல் கழகத்தின் மிக உயரிய விருதைப் பெற்றார். 1931 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை அக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[8]

பாப்ரி, தன்னுடைய பணிக்காலத்தில், 197 அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்,14 நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தன்னுடைய முக்கியமான அறிவியல் சாதனைகளுக்காக, 1918 இல் இலண்டன் [[அரச கழகம்|அரச கழகத்தின் ரம்போர்ட் பதக்கம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இவருடைய பணி அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க தேசிய அறிவியல் கழக்த்தின் ஹென்றி டிரேப்பர் பதக்கம் (1919)[9] மற்றும் பிராங்கிளின் கல்விக்கழகத்தின் பதக்கமும் ( 1919) பெற்றார். 1927 ஆம் ஆண்டு அவர் பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. லூயி டே பிராலி (1947). "Charles Fabry. 1867-1945". Obituary Notices of Fellows of the Royal Society 5 (15): 445–450. doi:10.1098/rsbm.1947.0010. 
  2. Stratton, F. J. M. (1946). "Prof. Charles Fabry, For.Mem.R.S". Nature 157 (3986): 362. doi:10.1038/157362a0. Bibcode: 1946Natur.157..362S. 
  3. "Obituary Notices :- Fabry, Marie Paul Auguste Charles". Monthly Notices of the Royal Astronomical Society 106: 42. 1946. doi:10.1093/mnras/106.1.42. Bibcode: 1946MNRAS.106...42.. 
  4. Mulligan, J. F. (1998). "Who were Fabry and Pérot?". American Journal of Physics 66 (9): 797–802. doi:10.1119/1.18960. Bibcode: 1998AmJPh..66..797M. 
  5. Fabry, C; Perot, A (1899). "Theorie et applications d'une nouvelle methode de spectroscopie interferentielle". Ann. Chim. Phys 16 (7). 
  6. Perot, A; Fabry, C (1899). "On the Application of Interference Phenomena to the Solution of Various Problems of Spectroscopy and Metrology". Astrophysical Journal 9: 87. doi:10.1086/140557. Bibcode: 1899ApJ.....9...87P. http://adsabs.harvard.edu/full/1899ApJ.....9...87P. 
  7. J. M. Vaughan (1989). The Fabry-Perot interferometer: history, theory, practice, and applications. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85274-138-2.
  8. Bulletin de la Société astronomique de France, November 1937, plates X-IX
  9. "Henry Draper Medal". National Academy of Sciences. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_பாப்ரி&oldid=3586893" இலிருந்து மீள்விக்கப்பட்டது