சார்ல்ஸ் பெர்ரோமியோ

சார்லசு பொர்ரோமியோ (Charles Borromeo) (பிறப்பு 1 திசம்பர் 1958[3]) என்பவர் ஒரு முன்னாள் இந்தியத் தடகள வீரர் ஆவார். 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற தில்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1:46:81 என்ற சாதனை நேரத்துடன் தங்கப் பதக்கம் வென்றமைக்காக அருச்சுனா விருது பெற்றார். இவர் இலாசு ஏஞ்சல்சில் நடைபெற்ற 1984 கோடைக்கால ஒலிம்பிக்க விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் புகழ் வெளிச்சத்தில் இருந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். ஆனால், இவரது திறன்வாய்ந்த முயற்சிகள் இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதினை 1984 ஆம் ஆண்டில் பெற்றுத்தந்தது. தனது ஓய்விற்குப் பிறகு, இவர் இந்தியாவில் விளையாட்டினை தேசிய அளவிற்கு உயர்த்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்தியாவில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்ற அமைப்பில் தேசிய விளையாட்டுத்துறை இயக்குநராகப் பணியாற்றினார்.

சார்லசு பொர்ரோமியோ
தனித் தகவல்கள்
முழுப் பெயர்சார்லசு பொர்ரோமியோ
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்1 திசம்பர் 1958 (1958-12-01) (அகவை 66)
பிறந்த இடம்தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)800 மீட்டர் ஓட்டம்
 
பதக்கங்கள்
விரைவோட்டம்
நாடு  இந்தியா
Asian Games
தங்கப் பதக்கம் – முதலிடம் 1982 New Delhi 800 m [1]
Asian Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1985 Jakarta 800 m[2]

தொடக்க கால வாழ்க்கை

தொகு

இவர் இந்தியாவின் தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற ஊரில் 1958 ஆம் ஆண்டு திசம்பர் 1 ஆம் நாள் பிறந்தார். இவர் தேவகோட்டையில் உள்ள முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளியிலும், தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும் தனது பள்ளிக்கல்வியை முடித்தார்.

தனது உயர்கல்வியைத் தொடர இவர் அகமதாபாது சென்றார். அங்கு புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பயின்றார். தனது கல்லூரிக் காலத்திலும் விளையாட்டில் இவர் காட்டிய திறமை இவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது. சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதினையும் பெற்றுத்தந்தது. 1978 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டிகளில் இவரது சாதனை நேரமானது இவருக்குத் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. 1979 ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற 1979 கோடைக்கால யுனிவெர்சியேடு போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பினையும் இவர் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தொகு

1979 ஆம் ஆண்டில் இவர் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் விளையாட்டு உதவியாளராகப் பணியில் சேர்ந்து எண்ணற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்றார்.

1982-ஆம் ஆண்டில் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். மும்பையில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கிடையேயான தடகளப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். கோழிக்கோட்டில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான போட்டியில் வாகையாளரானார். மேலும், won the Gold at the Pakistan National Games at பெசாவரில் நடைபெற்ற பாக்கித்தானிய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார். சீனாவில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகிளல் வெண்கலம் வென்றார். இந்தியத் தடகள அணி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் சென்றபோது தலைமை தாங்கினார்.

1982 ஆம் ஆண்டு தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 800 மீட்டர் ஓட்டத்தில் 1:46:81 வினாடிகளில் சாதனைப் படைத்து தங்கம் வென்றார்.(1976 மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் செய்த தேசிய சாதனைஸ்ரீ ராம் சிங் 1:45.77)  இவரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் டாடா ஊழியர் ஆவார்.

1984 ஆம் ஆண்டில் டாடா அவரை சிறந்த விளையாட்டு வீரராகக் கௌரவித்தார். போரோமியோ பின்னர், யப்பான் மற்றும் சீனா உட்பட உலகெங்கிலும் பல தடகள சந்திப்புகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் மீண்டும் தங்கம் வென்றார். இவர் 1984 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் லாஸ் ஏஞ்சல்சில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்ஃ 1:51.52 நேரத்தில் இலக்கினை அடைந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்த பிறகு முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.

ஜகார்த்தாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியிலும், 1985 ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணியின் அணித்தலைவராக பொரோமியோ இருந்தார். இரண்டு போட்டிகளிலும் வெள்ளி வென்றார். 1986 ஆம் ஆண்டு தனது 28வது வயதில், மீண்டும் மீண்டும் முழங்கால் பிரச்சனைகளை அனுபவித்து வந்த அவர், ஒரு தடகள வீரராக ஓய்வு பெற்றார்.

இந்திய அரசு இவருக்கு 1982 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதினையும் 1984 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதினையும் கொடுத்து கௌரவித்தது.[4]

ஓய்விற்குப் பிந்தைய பணிகள்

தொகு

ஓய்விற்குப் பிந்தைய காலகட்டத்தில் பொர்ரோமியோ சிறப்பு ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.[5] இவர் சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்ற அமைப்பில் தேசிய விளையாட்டு இயக்குநர் பணியாற்றினார். இது சிறப்பு ஒலிம்பிக்கின் இந்தியக் கிளை அமைப்பாகும். மன வளர்ச்சி குன்றிய மக்களுக்கான விளையாட்டு மேம்பாடு குறித்து இந்த அமைப்பு கவனம் செலுத்தியது. இவர் விளையாட்டுகளுக்கான கூட்டமைப்பில் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  2. "Asian Championships". gbrathletics. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  3. "சார்ல்ஸ் பெர்ரோமியோ". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
  4. Sports portal, Ministry of Youth Affairs and Sport, Government of India பரணிடப்பட்டது 25 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம் accessed 15 November 2006.
  5. Business Line Article dated 2 December 2005, accessed 15 November 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பெர்ரோமியோ&oldid=3666909" இலிருந்து மீள்விக்கப்பட்டது