சார்வரி ஆண்டு
தமிழ் ஆண்டுகள் 60 இல் 36 ஆம் ஆண்டு
சார்வரி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திநான்காம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் வீறியெழல் என்றும் குறிப்பர்
சார்வரி ஆண்டு வெண்பா தொகு
சார்வரி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில் சாதி, இன பேதமின்றி எல்லா சமயத்தினரும் நோயால் பாதிக்கபடுவர். குறைவாக மழை பொழியும். உணவு விளைச்சல் என்கிறது.[2]
சார்வரி ஆண்டு நிகழ்வுகள் தொகு
- சார்வரி ஆண்டு மார்கழி 18 அன்று (1901 சனவரி 1) சி. வை. தாமோதரம்பிள்ளை இறந்தார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "சார்வரி". பொருள் (விக்சனரி). https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF. பார்த்த நாள்: 16 ஏப்ரல் 2020.
- ↑ வேங்கடசுப்பிரமணியன் (2020 ஏப்ரல் 13). "சார்வரி வருஷ பலன்கள் - இந்த வருடம் புயல், மழை எப்படி? இந்தியா எப்படி இருக்கும்?". கட்டுரை (இந்து தமிழ்). https://www.hindutamil.in/news/astrology/special-articles/548664-sarvari-podhu-palangal.html. பார்த்த நாள்: 16 ஏப்ரல் 2020.